June 2024

வடக்கின் மீள்எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும்என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய (JICA) தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கும் ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையத்தின் தொண்டர்களை வரவழைத்து முன்னெடுக்கவுள்ள திட்டங்களை கௌரவ ஆளுநருக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.பிரணவநாதன் அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டார். பாரிய அழிவிலிருந்து ஜப்பான் மீண்டெழுந்து வர காரணமாகிய அறிவு , வடக்கின் மீள் […]

வடக்கின் மீள்எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும்என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கைபொருளாதாரத்தில் வலுவடைந்த மாகாணமாக மாற்றுவது ஜனாதிபதியின் இலக்காக உள்ளதெனவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபன் ஆகியோரின் தலைமையில்  27/06/2024 நேற்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய கௌரவ ஆளுநர், மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கு அமைய வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தார். தொழில் அற்றோர் பிரச்சினைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்வு திட்டங்கள் தொடர்பிலும், வாழ்வாதார உதவி திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட்டார். ஏனைய மாகாணங்களை போல வடக்கையும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மாகாணமாக மாற்றுவதே

வடக்கைபொருளாதாரத்தில் வலுவடைந்த மாகாணமாக மாற்றுவது ஜனாதிபதியின் இலக்காக உள்ளதெனவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும்,கௌரவ ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு

இலங்கை கடற்படையின் வடக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அத்மிரல் ரோஹித்த அபேசிங்க, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, ஆளுநர் செயலகத்தில் இன்று (26/06/2024) சிநேகபூர்வ ரீதியாக சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். யாழ் குடாநாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தீவு பகுதி மக்களுக்கான மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும்,கௌரவ ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு Read More »

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்து கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக் (Andrew Patrick) உள்ளிட்ட குழுவினர் இன்று (26/06/2024) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, தொழில் வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 1500 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அவர்களை மீள் குடியேற்றுவதற்கான உரிய

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்து கலந்துரையாடல் Read More »

ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டம்

யூன் 19, 2024 அன்று, வவுனியா மாவட்டச் செயலகத்திலும் மற்றும் யூன் 20, 2024 அன்று, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலும் ஊராட்சி முற்றக் (Townhall) கூட்டங்கள் நடைபெற்றன. பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன. வவுனியாவில்

ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டம் Read More »

எமது பாரம்பரியங்களை நாமே பாதுகாக்க வேண்டும். – அம்மாச்சி உணவக திறப்பு விழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் சங்கானை பஸ் தரிப்பிட சதுக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (25/06/2024) திறந்து வைத்தார். அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை திறந்து வைத்த கௌரவ ஆளுநர், உணவகத்தின் விற்பனை செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்ததுடன், வலிகாமம் மேற்கு பகுதி பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வைத்தார். உள்ளூர் கலைஞர்கள் மற்றும் விவசாயிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும்

எமது பாரம்பரியங்களை நாமே பாதுகாக்க வேண்டும். – அம்மாச்சி உணவக திறப்பு விழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

பலாலி சர்வதேச விமானநிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் கௌரவ ஆளுநர் அவர்களால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் இன்று (25/06/2024) திறந்துவைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக பயணிக்க கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய  சுற்றுலா வழிகாட்டி கையேடுகளை தகவல் தொடர்பு நிலையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்கான  தகவல்  தொடர்பு நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர், விமான

பலாலி சர்வதேச விமானநிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் கௌரவ ஆளுநர் அவர்களால் திறந்துவைப்பு Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை – 02 ” பருவ இதழ் வெளியீடு

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை பருவ இதழின் 02 ஆவது இதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த அறுவடை பருவ இதழின் வெளியீட்டு நிகழ்வு, 20.06.2024 அன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில், விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் தின நிகழ்வின்போது நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ அவர்கள் தலைமையில் நடைபெற்ற “அறுவடை” பருவ இதழ் 02 வெளியியீட்டு நிகழ்வில் வடக்கு மாகாண

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை – 02 ” பருவ இதழ் வெளியீடு Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றுச்சூழல் தின நிகழ்வு

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவினால் சுற்றுச்சூழல் தின நிகழ்வு 20.06.2024 அன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ தலைமையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின நிகழ்வில், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, அறுவடை சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு ஆகியன இடம்பெற்றதோடு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நாடகப்போட்டியில்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றுச்சூழல் தின நிகழ்வு Read More »

நெல்லியடி வாணிபர் கழகத்தின் கௌரவிப்புவிழாவின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலந்துச் சிறப்பித்தார்.

நெல்லியடி வாணிபர் கழகத்தின் ஏற்பாட்டில் தனியார் விடுதியொன்றில் நடத்தப்பட்ட கௌரவிப்பு விழாவின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார். இந்நிகழ்வில் நெல்லியடியை சேர்ந்த 15 வர்த்தகர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கல்வி, மருத்துவம், சமயம், சமூக சேவைகளில் ஈடுபடும் 04 சான்றோர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கான நினைவு கேடயங்கள் கௌரவ ஆளுநரால் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் நெல்லியடி பகுதியை சேர்ந்த 12 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.    

நெல்லியடி வாணிபர் கழகத்தின் கௌரவிப்புவிழாவின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலந்துச் சிறப்பித்தார். Read More »