October 2023

நெடுந்தீவு மண்ணில் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் 2023

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு வடமாகாண பிரதம செயலாளரின் தலைமையில் சிறுவர் தினக் கொண்டாட்டமானது 08.10.2023 அன்று காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேச சபையின் தேவா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. நெடுந்தீவின் ஏழு முன்பள்ளிகளைக் கொண்ட 137 சிறுவர் சிறுமியர்கள் கலந்து சிறப்பித்திருந்த இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் பிரதம செயலாளர் மற்றும் அவரது பாரியார், தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி நிர்வாகம்), தீவக வலய முன்பள்ளி உதவிக் கல்வி பணிப்பாளர், […]

நெடுந்தீவு மண்ணில் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் 2023 Read More »

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் – 2023, வவுனியா மாவட்டம்

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கோடு அவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்த வகையில் வவுனியா மாவட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்கான உபகரண உதவி வழங்கும் நிகழ்வானது வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் 13.10.2023 அன்று காலை 11 மணியளவில் மாவட்டச் சமூக சேவைகள் அலுவலகம், வவுனியாவில் நடைபெற்றது.  

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் – 2023, வவுனியா மாவட்டம் Read More »

வடக்கிற்கு சரியான நேரத்தில் சரியானபருவத்தில் உரங்கள் வழங்கப்படும்

வடமாகாணத்தில் இவ்வருடம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் உரங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் 2023.10.15 அன்று நடைபெற்ற விவசாயம் தொடர்பான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் கூறியிருந்தார். வடமாகாணத்தில் நெற்செய்கைக்கு மட்டுமன்றி மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட பயிர்களுக்கும் விவசாய திணைக்களம் அதிகூடிய ஆதரவை வழங்கும் எனவும் விவசாய அமைச்சர் கூறினார்.  இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு வடமாகாணத்தின் விவசாய செயற்பாடுகள் பெருமளவு பங்களிப்பதாகவும், வாழ்வாதாரத்தை

வடக்கிற்கு சரியான நேரத்தில் சரியானபருவத்தில் உரங்கள் வழங்கப்படும் Read More »

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

14 ஒக்ரோபர் 2023 அன்று காலை 7.30 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட கப்பல் காங்கேசந்துறையை பிற்பகல் 12.30 அளவில் வந்தடைந்தது. காங்கேசன்துறை வந்த செரியாபாணி கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சித்தார்த்தன் மற்றும் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம் Read More »

தற்கால மாணவர்கள் சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் விவசாய கண்காட்சியில் தெரிவிப்பு.

10.10.2023 மற்றும் 11.10.2023 ஆகிய தினங்களில் மல்லாவி மத்திய கல்லூரியில் தொழில் முனைவோர் பாடசாலை தோட்ட வேலைத்திட்டத்தின் விவசாயக் கண்காட்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் தற்கால மாணவர்கள் விவசாயக் கல்வி மற்றும் தொழிநுட்ப அறிவுடன் கூடிய சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என கூறியதோடு அதற்கான உந்துதலைக் கொடுப்பதற்கான சந்தர்ப்பமாக இக்கண்காட்சி அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இக்கண்காட்சி நடைபெறும் துணுக்காய், மல்லாவி பிரதேசமானது ஒரு பின்தங்கிய மற்றும் போரால்

தற்கால மாணவர்கள் சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் விவசாய கண்காட்சியில் தெரிவிப்பு. Read More »

வடமாகாண சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவதானிப்பதற்காகவும் வடமாகாண ஆளுநரைச் சந்திக்கவும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் (Anne marie Belinda Trevelyan) தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரித்தானிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் வடமாகாண மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் சிறந்த எதிர்காலம் தெரிவதாகவும் பிரித்தானிய அமைச்சர் கூறியிருந்தார். இந்தச் சந்திப்பு 12 ஒக்ரோபர் 2023 அன்று யாழ்.நகரில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம்

வடமாகாண சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவதானிப்பதற்காகவும் வடமாகாண ஆளுநரைச் சந்திக்கவும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Read More »

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழான கலப்பின சோள விதை உற்பத்தி நிகழ்வின் அறுவடை வயல் விழா

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வவுனியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கலப்பின சோளம் (MI Maize Hybrid 04) விதை உற்பத்தி அறுவடை வயல் விழா 04.10.2023 அன்று புலவனானூர், பூவரசன்குளம் கிராமத்தில் மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு. பொ. அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. சுகந்தினி செந்தில்குமரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் வவுனியா மாவட்ட நவீன மறுவயற்பயிர் விதை உற்பத்தியாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஊடுகளைகட்டும்

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழான கலப்பின சோள விதை உற்பத்தி நிகழ்வின் அறுவடை வயல் விழா Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – கரைச்சி

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 18 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 25 செப்ரம்பர் 2023 தொடக்கம் 27 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சிறுவர் இல்ல குருகுல முன்பள்ளியில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.தில்லையம்பலம் திவாகரன் முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.இரத்தினசபாபதி கௌசிகன் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப்

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – கரைச்சி Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வேலனை

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வேலனை பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 18 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 21 செப்ரம்பர் 2023 தொடக்கம் 23 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் மண்கும்பானில் அமைந்துள்ள சௌபாக்கியா நிலையத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.பத்மநாதன் ராகவன் – தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர், முதன்மை வளவாளராகவும் திரு.கொன்ஸ்ரன்னரன் அன்ரன் ஜெகன் – அபிவிருத்தி உத்தியோகத்தர், துணை

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வேலனை Read More »

கல்வி அமைச்சர் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் வெகுவிமர்சையாக நடைபெற்ற தேசிய தொழிற்றகமை சான்றிதழ் வழங்கும் விழா.

கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க வடக்கு மாகாணத்தின் விவசாய திணைக்களம், கைத்தொழில் திணைக்களம், மீன்பிடி அலகு போன்றவற்றால் நடாத்தப்பட்ட தேசிய தொழிற்றகமை சான்றிதழ் பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்தவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் விழா வடமாகாண பிரதம செயலாளரின் தலைமையில் 2023.10.10 அன்று சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்திலே நடைபெற்றது. இந்நிகழ்விலே கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேம ஜெயந்த, மீன்பிடித்துறை அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண

கல்வி அமைச்சர் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் வெகுவிமர்சையாக நடைபெற்ற தேசிய தொழிற்றகமை சான்றிதழ் வழங்கும் விழா. Read More »