June 2023

சிறுதானிய உணவு ஊக்குவிப்பு நாள் – 2023

சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு எமது பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையையும் மேம்படுத்தி எமது உள்ளுர் விவசாயப பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உலக தரிசன நிறுவன நிதி அனுசரணையுடன் சிறுதானிய உணவு ஊக்குவிப்பு நாள் 2023.06.15 வியாழக்கிழமை காலை 08.30 மணிக்கு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம்இ திருநெல்வேலியில் திருமதி. அ.சிறிரங்கன் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்இ யாழ்ப்பாணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி […]

சிறுதானிய உணவு ஊக்குவிப்பு நாள் – 2023 Read More »

இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான கலந்துரையாடல்

மேற்படி கலந்துரையாடலானது கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் 25.05.2023 (புதன்கிழமை) மதியம் 12.30 மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் திரு.ஸ்ரீ ராஜேஷ் நட்ராஜ் மற்றும் அவரது குழுவினரும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான கலந்துரையாடல் Read More »

உள்ளூராட்சி அதிகாரசபைகளுடனான கலந்துரையாடல்

மேற்படி கலந்துரையாடலானது கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் 24.05.2023 (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி அதிகார சபைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டு உள்ளூராட்சி மன்றங்களின் தொழிற்பாடுகள், சபை வீதிகள், சபை வருமானங்கள், சோலைவரி அறவீடுகள் மற்றும் நிலுவைகள், மன்றங்களின் செயலாற்றுகை மதிப்பீடு, கழிவு முகாமைத்துவம், சத்துணவு வழங்கல், டெங்கு ஒழிப்பு, சிறுவர் பூங்கா பராமரிப்பு,

உள்ளூராட்சி அதிகாரசபைகளுடனான கலந்துரையாடல் Read More »

வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் தேசிய சுற்றாடல் வாரம் ( 2023.05.30 – 2023.06.05 )

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தினால் இவ்வருடத்தின் சர்வதேச சுற்றாடல் தினமானது ‘பிளாஸ்ரிக் மூலம் ஏற்படக்கூடிய மாசை தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கையில் இந்த ஆண்டு மே மாதம் 30ம் திகதி தொடக்கம் ஜீன் மாதம் 05ம் திகதி வரையிலான வாரம் ‘தேசிய சுற்றாடல் வாரமாக’ அறிவிக்கப்பட்டது. இதற்கமைவாக வடக்கு மாகாண சபையிலும் வாரம் முழுவதும் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. முதற்கட்டமாக 2023.05.30 அன்று மரநடுகை தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும்

வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் தேசிய சுற்றாடல் வாரம் ( 2023.05.30 – 2023.06.05 ) Read More »

அச்சுவேலி மருந்து உற்பத்திப்பிரிவில் அகஸ்திய முனிவர் சிலை நிறுவப்பட்டது

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் மருந்து உற்பத்திப்பிரிவு – அச்சுவேலியில் கடந்த 24.05.2023 அன்று அகஸ்திய முனிவருடைய சிலையானது புதிதாக நிறுவப்பட்.டது. அகஸ்திய முனிவருடைய சிலையானது மருந்து உற்பத்திப்பிரிவின் இயந்திர இயக்குனரினால் அன்பளிப்பு செய்யப்பட்டு மருந்து உற்பத்திப்பிரிவு வளாகத்தின் முற்புறப் பகுதியில் நிறுவப்பட்டது. இந்நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர், மருந்து உற்பத்திப் பிரிவின் மருத்துவ பொறுப்பதிகாரி, யாழ் மாவட்ட சித்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர், நவக்கிரி மூலிகைத்தோட்டத்தின் மருத்துவப் பொறுப்பதிகாரி,

அச்சுவேலி மருந்து உற்பத்திப்பிரிவில் அகஸ்திய முனிவர் சிலை நிறுவப்பட்டது Read More »