February 2020

தேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையைஊக்குவித்தலும்தொடர்பானபயிற்சிநெறி

தேன் உற்பத்திக்காகதேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தலும் எனும் பயிற்சி நெறியானது வட்டக்கச்சியிலுள்ள மாவட்டவிவசாயப் பயிற்சிநிலையத்தில் 26.02.2020 ஆம் திகதி நடைபெற்றது. இப் பயிற்சிநெறியின் வளவாளர்களாக சுவீடன் விவசாய விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் தகை நிலைப் பேராசிரியர் திரு.ந.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் திருமதி.லோட்டாகிறிஸ்ரியன்சன் அவர்களும் கலந்துகொண்டனர். மாகாண விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் இப் பயிற்சிநெறியில் பங்குபற்றிப் பயனடைந்தனர் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்கள் இப் பயிற்சிநெறியினை ஆரம்பித்து வைத்தார். இப் பயிற்சிநெறியில் […]

தேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையைஊக்குவித்தலும்தொடர்பானபயிற்சிநெறி Read More »

கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணியினை யாழ் மாநகரசபை ஆரம்பித்தது

வீதி அபிவிருத்தி மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் அனைத்து பொறுப்புசார் அதிகாரிகளுடன் வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்கள் விரிவாக ஆராய்ந்து சில நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். அதற்கமைவாக 25 பெப்பிரவரி 2020 முதல் யாழ் நகரில் கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணியினை யாழ் மாநகரசபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ளனர்.  இதுவரை நாற்பத்தைந்துக்கு மேற்பட்ட நாய்கள் இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டதாக குறித்த நடவடிக்கைகளை வழிநடத்தும் சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

கட்டாக்காலி நாய்களை பிடிக்கும் பணியினை யாழ் மாநகரசபை ஆரம்பித்தது Read More »

ஆளுநரின் செயலாளரினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன

26 பெப்பிரவரி 2020 அன்று வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநரின் செயலாளர் திரு எஸ் சத்தியசீலன் அவர்களால் இரு புதிய நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன. வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளராக திரு ராஜேந்திரம் குருபரன் தனது நியமன கடிதத்தை ஆளுநரின் செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்டார் இவர் முன்பு வடமாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது இதேவேளை வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளராக கடமையாற்றிய திரு பாலன் முகுந்தன் விளையாட்டுத்துறை திணைக்களத்தின்

ஆளுநரின் செயலாளரினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன Read More »

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், திணைக்களத்தின் ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், பிரிவு தலைவர்கள், சாமாசங்களின் பிரதி தலைவர்கள், உள்ளிட்ட குழுவினர் 24 பெப்பிரவரி 2020 அன்று காலை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் இச்சந்திப்பின் போது பேசப்பட்டன. வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பில் இருக்ககூடிய சிக்கல் நிலைகள் தொடர்பில் விரிவாக ஆளுநருக்கு எடுத்து கூறப்பட்டது இச்சந்திப்பின்

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பாலங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் தட்டாமலை வீதிப்பாலம், தண்டுவான் பெரியகுளம் வீதிப்பாலம் மற்றும் நெடுங்கேணி தண்ணி முறிப்பு வீதிப்பாலம் ஆகிய மூன்று பாலங்கள் புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் தவிசாளர் அவர்களால் 20/02/2020 அன்று வைபவரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பாலங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது Read More »

நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை அலுவலக கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பிரிவுக்கான நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை அலுவலக கட்டடம் 17 பெப்பிரவரி 2020 வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திணைக்களம் பல்வேறு தேவைப்பாடுகளுடன் இயங்கி வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் 15 மில்லியன் ஒதுக்கீட்டில் நிரந்தர கட்டடம் நிர்மாணிக்கும் பணி ஆரம்பித்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக பணிகளை மேற்கொள்வதற்கான 2019ஆம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான

நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை அலுவலக கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

நீர்வள தொழில்துறை சார்ந்த மாதர் அமைப்புக்களை உருவாக்கும் ஆரம்ப வைபவ நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலந்துகொண்டார்

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கடற்றொழில் மற்றும் நீரக வள அமைச்சுடன் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீர்வள தொழில்துறை சார்ந்த மாதர் அமைப்புக்களை உருவாக்கும் ஆரம்ப வைபவம் 17 பெப்ரவரி 2020 அன்று நடைபெற்றது. நீர்வளம் சார்ந்த மற்றும் ஏனைய உள்ளக மனைக் கைத்தொழில் முயற்சிகளில் மாதர்களை ஈடுபடுத்தி அவர்களை வலுப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டமான நீர்வள தொழில்சார் மாதர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இவ் மாதர்

நீர்வள தொழில்துறை சார்ந்த மாதர் அமைப்புக்களை உருவாக்கும் ஆரம்ப வைபவ நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலந்துகொண்டார் Read More »

வீதிப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்

வீதிப் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களைத் தவிர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் 14 பெப்பிரவரி 2020 அன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் ஏற்படுகின்ற வீதி விபத்துகள் தொடர்பாகவும் வீதி விபத்துக்களைக் தடுக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆளுநருடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. வீதிப் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பான கலந்துரையாடலில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அதிகாரிகள், மருத்துவர்கள், பொலீஸ் உயர் அதிகாரிகள், வீதிப் பாதுகாப்பு பொலீஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள பணிப்பாளர்கள்

வீதிப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாணத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தி

வட மாகாணத்தில் காற்று மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஆக்கக் கூடிய பசுமை ஆற்றல் உற்பத்திச் சாத்தியங்கள் மற்றும் அனுகூலங்களைப் பகிர்ந்து கொண்டு வட மாகாணத்தில் இது தொடர்பானவர்களை விழிப்பாக்கும் அறிவு பகிர்வு அமர்வினை 13 பெப்பிரவரி2020 அன்று யாழ்ப்பாணத்தில் இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகம் நடாத்தியது. இவ்வமர்வினை, வடக்கு மாகாணத்தின் ஆளுநர் திருமதி பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆரம்பித்து வைத்தார். அவரது உரையில், மேற்கத்திய

வடக்கு மாகாணத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தி Read More »

வடக்கு மாகாண ஆளுநர் கீரிமலை தீர்தக்கரை மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களுக்கு விஜயம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கீரிமலை தீர்தக்கரை மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் 13 பெப்பிரவரி 2020 அன்று மேற்கொண்டார். குறிப்பிட்ட கீரிமலை பகுதியில் தீர்த்தமாடும் பகுதியில் மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமையவே இந்த விஜயம் அமைந்திருந்தது. நேரடியாக குறித்த பகுதிக்கு சென்ற ஆளுநர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார். அப்பகுதிகளில் மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு சில பரிந்துரைகளை ஆளுநர் வழங்கினார்.

வடக்கு மாகாண ஆளுநர் கீரிமலை தீர்தக்கரை மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் Read More »