May 2019

சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் Mr. Damiano Sguaitamatti அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (23) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இலங்கையில் தனது பணிக்காலத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் மீண்டும் சுவிஸிற்கு திரும்பவுள்ள Mr.Damiano அவர்கள் மரியாதை நிமித்தம் கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. – வடக்கு […]

சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வில் ஆளுநர் கலந்து கொண்டார்

கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் நிகழ்வு மிருசுவில் புனித நீக்ளஸ் ஆலயத்தில் இடம்பெற்றபோது ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (21) காலை 8:45 மணிக்கு இணைந்து கொண்டார்.

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வில் ஆளுநர் கலந்து கொண்டார் Read More »

முல்லைத்தீவு மாவட்ட பிரதேசசபை உறுப்பினர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளினதும் உறுப்பினர்களுக்கும் கௌரவ ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (21) முல்லைத்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. யுத்தத்திற்கு முகம்கொடுத்த மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களுடைய உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பிலும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர்கள் தமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையாக

முல்லைத்தீவு மாவட்ட பிரதேசசபை உறுப்பினர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வடமாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம்

வடமாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் 20 மே 2019 அன்று பிற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் 57 தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களும் 15 கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களும் 09 விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டன.  

வடமாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் Read More »

ஈஸ்டர் தாக்குதலின் ஒரு மாத பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண ஆளுநரின் விசேட வேண்டுகோள்

  இலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாணத்தின் அனைத்து சமயத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த தருணத்தில் வடமாகாணத்தின் அனைத்து மக்களையும்

ஈஸ்டர் தாக்குதலின் ஒரு மாத பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண ஆளுநரின் விசேட வேண்டுகோள் Read More »

மன்னார் மாவட்ட விவசாயக் கண்காட்சி – 2019

“காலநிலை மாற்றத்தை வெற்றி கொள்ளும் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல்’’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் விவசாயக் கண்காட்சியானது உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 09.05.2019 தொடக்கம் 11.05.2019 வரையான மூன்று நாட்கள் நடைபெற்றன. மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுக்கூர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக

மன்னார் மாவட்ட விவசாயக் கண்காட்சி – 2019 Read More »

வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் கீழ்வரும் சிறுகைத்தொழில் போதனாசிரியர் மற்றும் விற்பனை முகாமையாளர் பதவிகளுக்கான நியமனம் வழங்கல்

தொழிற்றுறைத் திணைக்களத்திற்கு சிறு கைத்தொழில் போதனாசிரியர்கள் ஆறு பேருக்கும் ஒரு விற்பனை முகாமையாளர் பதவிக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களினால் 2019.05.15 ஆம் திகதி (புதன்கிழமை) பிரதம செயலாளர் செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் திருமதி. ரூபினி வரதலிங்கம், செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், திரு. இ.பத்மநாதன், பிரதிப் பிரதம செயளாலர் – நிதி, திரு.ப.காண்டீபன், கணக்காளர், தொழிற்றுறைத் திணைக்களம், வடக்கு மாகாணம் ஆகியோர்

வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் கீழ்வரும் சிறுகைத்தொழில் போதனாசிரியர் மற்றும் விற்பனை முகாமையாளர் பதவிகளுக்கான நியமனம் வழங்கல் Read More »

சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்து கௌரவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிறந்த விவசாயிகள் கௌரவிப்பில் 2018 ஆம் ஆண்டிற்கான நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுக்கூர் அவர்களின் தலைமையில் 11.05.2019 ஆம் திகதி சனிக் கிழமை உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்

சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018 Read More »

வட மாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்கள் – வடமாகாண ஆளுநர் நடவடிக்கை

நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்களை தற்காலிகமாக வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோவுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கௌரவ ஆளுநர் அவர்கள் பொலிசாரின் தேவைக்கு தற்காலிகமாக வாகனங்களை வழங்கும் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். இதன்படி வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்ட செயலகங்களிலும் இரண்டு வாகனங்கள் அவசர நிலைமையில்

வட மாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்கள் – வடமாகாண ஆளுநர் நடவடிக்கை Read More »