April 2019

சேதனச் செய்கை தொடர்பான வயல்விழா

சேதன விவசாயச் செய்கை தொடர்பான வயல் விழாவானது உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் திரு.ம.மகிழன் அவர்களின் தலைமையில் உருத்திரபுரம் வடக்கைச் சேர்ந்த திருமதி.தே.இரஞ்சிதராணி அவர்களின் வயலில் 22 மார்ச் 2019 அன்று நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வட பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் (ஆராய்ச்சி) கலாநிதி.செ.ஜே.அரசகேசரி, கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திரு.அ.செல்வராஜா, சென்றூப் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.ச.சண்முகசுந்தரம், கிளிநொச்சி மாவட்ட பிரதி […]

சேதனச் செய்கை தொடர்பான வயல்விழா Read More »

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம்

வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று (03) நடைபெற்றது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு  

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் Read More »

மருத்துவ கண்காட்சி – 11 – 2019

வடமாகாண சுகாதார அமைச்சும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமும் இணைந்து நடாத்திய மருத்துவக் கண்காட்சி-11 2019 இன் அங்குரார்ப்பண வைபவமானது யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் கிளிநொச்சி வளாகத்தில் 2019 ஏப்ரல் 02 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். யாழ் பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் கு.மிகுந்தன், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச

மருத்துவ கண்காட்சி – 11 – 2019 Read More »

சித்த மாவட்ட மருத்துவமனை – புதுக்குடியிருப்பில் பெண்கள் நோயாளர் விடுதி செயற்பாடுகள் ஆரம்பம்

மாவட்ட சித்த மருத்துவமனை, புதுக்குடியிருப்பில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் (2018/2019) கட்டப்பட்ட பெண் நோயாளர் விடுதியானது வேலை முற்றுப்பெற்று கையளிக்கப்பட்டதையடுத்து கடந்த 23.03.2019 அன்று அதனது செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

சித்த மாவட்ட மருத்துவமனை – புதுக்குடியிருப்பில் பெண்கள் நோயாளர் விடுதி செயற்பாடுகள் ஆரம்பம் Read More »

ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பானபயிற்சிப்பட்டறை

வடமாகாண ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் அ.பத்திநாதன்அவர்களின்அவர்களின் வழிகாட்டலில் Stromme Foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் பிரதிப் பிரதம செயலாளர் ஆளணியும் பயிற்சியும் அலுவலகத்தினால் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற நிறைவேற்றுத்தர அதிகாரிகளுக்கு நடாத்தப்பட்ட “ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல்” தொடர்பான பயிற்சிப்பட்டறையானது மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக 29.03.2019 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் 30.03.2019 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும் நடாத்தப்பட்டது. கிளிநொச்சி

ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பானபயிற்சிப்பட்டறை Read More »

பிரான்ஸ் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு 

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர்  Eric LAVERTU  அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (01) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். வடக்கிற்கான தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவரை உற்சாகமாக வரவேற்ற கௌரவ ஆளுநர் அவர்கள், வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து  தெளிவுபடுத்தினார். யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்தும் வடமாகாணத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையில் பாரியதொரு மாற்றம் இன்னும் ஏற்படாமல் அவர்கள் இன்றும் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அடிப்படையிலான வழிமுறைகளை

பிரான்ஸ் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு  Read More »

யாழ் வலி வடக்கு பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்கு 31 மார்ச் 2019 அன்று காலை விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அப்பிரதேசத்தின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு பின்னராக பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளின் விடுவிப்பு தொடர்பிலான முன்னேற்ற நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டும் ஏற்கனவே பாதுகாப்பு படையினரால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அப்பிரதேச மக்களின் தேவைப்பாடுகள் குறித்தும் ஆராயும் நோக்கில் ஆளுநர்

யாழ் வலி வடக்கு பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »