April 2019

13வது மாகாண மட்ட ஹெக்கி போட்டி

13வது மாகாண மட்ட மட்ட ஆண், பெண்களுக்கான ஹெக்கி போட்டி யாழ்ப்பாண கல்லூரி விளையாட்டரங்கில் 06.07 ஏப்பிரல் 2019 திகதிகளில் இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள் முதலாமிடம் – மன்னார் மாவட்டம் இரண்டாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம் மூன்றாமிடம் – வவுனியா மாவட்டம் பெண்கள் முதலாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம் இரண்டாமிடம் – மன்னார் மாவட்டம்

13வது மாகாண மட்ட ஹெக்கி போட்டி Read More »

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் – ஆளுநர் சந்திப்பு

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 08 ஏப்பிரல் 2019 அன்று பிற்பகல் யாழ் நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன், வடமாகாணத்தில் அண்மைக்காலமாக மதங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பிலும் அதனை எவ்வாறு இல்லாமல் செய்து வடமாகாணத்தில் இனங்களுக்கிடையிலான நல்லுறவினை கட்டியெழுப்ப முடியும்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் – ஆளுநர் சந்திப்பு Read More »

சூரிய மின்சக்தி நீர்ப்பாசனத்தின் கீழ் வெற்றிகரமான பயிர்ச்செய்கை சம்பந்தமான வயல்விழா

தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாகாண விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சூரிய சக்தியின் உதவியுடன் இயங்கும் நீர்ப்பாசனத் தொகுதியினைப் பயன்படுத்தி குறைந்த உற்பத்திச் செலவுடன் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கைக்கான வயல்விழா 04.04.2019 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் வற்றாப்பளையிலுள்ள எஸ்.ஈஸ்வரன் எனும் விவசாயியின் தோட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பூ.உகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும்,

சூரிய மின்சக்தி நீர்ப்பாசனத்தின் கீழ் வெற்றிகரமான பயிர்ச்செய்கை சம்பந்தமான வயல்விழா Read More »

யாழ்.மாவட்டத்தில் ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை

வடமாகாண ஆளுநர். கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் ஆலோசனையின் கீழ் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலில் Stromme Foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணியும் பயிற்சியும் அலுவலகத்தினால் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற நிறை வேற்றுத்தர அதிகாரிகளுக்கு “ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல்” தொடர்பான பயிற்சிப் பட்டறையானது வடக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்டு வருகின்றது. இப்பயிற்சிப் பட்டறையானது வடமாகாணத்திலுள்ள மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களில் நடாத்தி முடிக்கப்பட்டு

யாழ்.மாவட்டத்தில் ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை Read More »

ஊடகவியலாளர்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – ஆளுநர்

மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தமது ஒவ்வொரு அறிக்கையிடலின்போதும் சமூகப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டுமென ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். சர்வதேச ஊடக உதவி (International Media Support) அமைப்பு யாழ் ஊடக அமையத்துடன் இணைந்து வடமாகாண ஊடகவியலாளர்களுக்காக நடாத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலான பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கும் நிகழ்வு 05 ஏப்பிரல் 2019 அன்று மாலை யாழில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு

ஊடகவியலாளர்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – ஆளுநர் Read More »

புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

யாழ் மாவட்டத்தின் பிரதிப்பொலிஸ்மா அதிபராக புதிதாக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீ தமிந்த அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 05 ஏப்பிரல் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருவருக்குமிடையில் யாழ்மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வன்செயல்கள் அதிகரித்து காணப்படும் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதிகளில் அதிக பொலிஸ் கண்காணிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டார். –

புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? – கௌரவ ஆளுநர்

நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? இதுவே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மனித சமுதாயமும் தனியாகவும் குழுவாகவும் கேட்கவேண்டிய ஒரே ஒரு கேள்வி என்று நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். இதழியல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் 05 ஏப்பிரல் 2019 அன்று முற்பகல் கௌரவ ஆளுநர்

நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? – கௌரவ ஆளுநர் Read More »

எங்கள் தேசத்தை குணமாக்கும் பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு – கௌரவ ஆளுநர்

எங்கள் தேசத்தை திரும்பவும் குணமாக்கும் பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள யாழ் மருத்துவக்கண்காட்சியினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) கலந்துகொண்டு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 40 ஆவது வருட நிறைவினை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கௌரவ ஆளுநர் அவர்கள் இந்த கண்காட்சியை திறந்துவைப்பதில் நான் பெருமைப்படுகின்றேன் என்று தெரிவித்தார். இங்கு

எங்கள் தேசத்தை குணமாக்கும் பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு – கௌரவ ஆளுநர் Read More »

போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான ”சித்திரை புதுவருட உறுதியுரை” நிகழ்வு நடைபெற்றது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைவாக, போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான ”சித்திரை புதுவருட உறுதியுரை” நிகழ்வு 3 ஏப்பிரல் 2019 ஆம் திகதி, கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. பிரதி பிரதம செயலாளர்கள் – நிதி மற்றும் நிர்வாகம், பிரதம செயலாளர் செயலகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றின் அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சி நிரலிற்கு அமைவாக தேசிய கொடி மற்றும் மாகாணக் கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை

போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான ”சித்திரை புதுவருட உறுதியுரை” நிகழ்வு நடைபெற்றது Read More »

உலக ஓட்டிசம் தினத்தின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது

உலக ஓட்டிசம் தினத்தை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வானது 02 ஏப்ரல் 2019 ஆம் திகதி அன்று கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாதவம் ஓட்டிஸம் நிலையத்திலிருந்து தங்கள் பெற்றோருடன் வருகைதந்த சிறுவர் குழாமினர் இந் நிகழ்வில் பங்கேற்றனர். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அலுவலர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதம செயலாளர் கொத்தணியின்கீழ் வரும் திணைக்களங்களின் அலுவலர்கள் ஆகியோர்

உலக ஓட்டிசம் தினத்தின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது Read More »