April 2019

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் அவர்களும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம் பௌவுசி அவர்களும் சுவிஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்களும் பங்களாதேஸின் உயர்ஸ்தானிகரும் 09 ஏப்பிரல் 2019 அன்று பிற்பகல் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்த்திற்குமான அலுவலகம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் இதுவரையிலும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திராத றுகுணு பல்கலைக்ககழத்தின் 50 மாணவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து […]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு விஜயம் Read More »

யாழ் விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை ஆளுநர் வரவேற்றார்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான கௌரவ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 09 ஏப்பிரல் 2019 அன்று முற்பகல் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார் – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

யாழ் விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை ஆளுநர் வரவேற்றார் Read More »

மாகாண கண்காட்சி ஆளுநர் தலைமையில் ஆரம்பம்

வடமாகாணத்தின் கிராமிய மட்டத்திலான உற்பத்தி பொருட்களுக்கான அறிமுகத்தினையும் சந்தை வாய்ப்பினையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மாகாணக் கண்காட்சி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் 09 ஏப்பிரல் 2019 அன்று காலை யாழ் மத்திய கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கிராமிய மட்டத்திலான உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். இக்கண்காட்சி யாழ் மத்திய கல்லூரியில் இன்றும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. –

மாகாண கண்காட்சி ஆளுநர் தலைமையில் ஆரம்பம் Read More »

கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணக் கண்காட்சி – 2019

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் 2019 ஆண்டுக்கான மாகாண கண்காட்சியானது “மகளிர் மலர்ச்சியே கிராமிய மறுமலர்ச்சி” என்னும் தொனிப்பொருளில் 09 ஏப்ரல் 2019 அன்று காலை 08.30மணிக்கு ஆரம்பமாகி இரண்டு நாட்கள் (09,10-04-2019) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றுவருகிறது. கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் இக்கண்காட்சியினை பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கலந்துகொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். சிறப்பு

கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணக் கண்காட்சி – 2019 Read More »

எந்த தடை வந்தாலும் நான் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை முன்னெடுப்பேன் – ஆளுநர்

நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என்று வடமாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களில் பணிபுரிவதற்கு உள்வாங்கப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் கௌரவ ஆளுநர் தலைமையில் 08 ஏப்பிரல் 2019 அன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 91 அலுவலக உதவியாளர்கள் , 4 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் (குடிசார்)

எந்த தடை வந்தாலும் நான் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை முன்னெடுப்பேன் – ஆளுநர் Read More »

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடொன்றிற்கான “சித்திரை புதுவருட உறுதியுரை”

அதிமேதகு சனாதிபதி அவர்களின் நிலைபேறான அபிவிருத்தி எண்ணக்கருவின் கீழ் அவரது நேரடி கண்காணிப்பு மற்றும் நெறிப்படுத்தலுடன் செயற்படுத்தப்படுகின்ற “போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு” போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கமைவாக கடந்த 03.04.2019ஆம் திகதி காலை 8.30 மணிக்கு வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் ‘சித்திரை புதுவருட உறுதியுரை’ எடுக்கப்பட்டதுடன் போதை விடுதலை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்றும் நடாத்தப்பட்டது.

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடொன்றிற்கான “சித்திரை புதுவருட உறுதியுரை” Read More »

உலக ஓட்டிசம் விழிப்புணர்வு தினம் 2019

உலக ஓட்டிசம் தினத்தை முன்னிட்டு வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களமும் யாழ்ப்பாணம் வலயக் கல்வி அலுவலகத்தின் விசேட கல்விப் பிரிவும் இணைந்து விழிப்புணர்வு நிகழ்வு யா/ கோப்பாய் மகாவித்தியாலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி முகாமைத்துவம்) அவர்களின் தலைமையில் கடந்த 04.04.2019 வியாழக்கிழமை நடாத்தப்பட்டது.  இந் நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் ஓட்டிசம் தொடர்பான விழிப்புணர்வும் அது தொடர்பான யோகா செய்முறை விளக்கங்களும் வழங்கப்ட்டதுடன் விசேட தேவையுடைய மாணவர்களினால் கலை நிகழ்வுகளும் நடாத்தப்பட்டன. இந் நிகழ்வில் பிரதம

உலக ஓட்டிசம் விழிப்புணர்வு தினம் 2019 Read More »

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணிகளுக்கான உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது

வடக்கு மாகாண தொழினுட்ப உத்தியோகத்தர் சேவையின் பயிற்சித்தரம் (ஒரு வருடம்) இதற்கான 04 வெற்றிடங்கள், அலுவலக பணியாளர் சேவையின் தரம் III இற்கான 91 வெற்றிடங்கள், உள்@ராட்சி அமைச்சின் திணைக்கள சேவையின் குடியேற்ற உத்தியோகத்தர் பதவியணிக்கான 11 வெற்றிடங்கள் ஆகிய வற்றிற்கான தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு நியமனக் கடிதம் வழங்கல் நிகழ்வு 2019.04.08 ஆம் திகதி யாழ்.மாநகரசபையின் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள்

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணிகளுக்கான உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது Read More »

13வது மாகாண மட்ட ஆண், பெண்களுக்கான கரம் போட்டி

13வது மாகாண மட்ட மட்ட ஆண், பெண்களுக்கான கரம் போட்டி யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்லூரி 06 ,07 ஏப்பிரல் 2019 திகதிகளில் இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள் முதலாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம் இரண்டாமிடம் – மன்னார் மாவட்டம் மூன்றாமிடம் – வவுனியா மாவட்டம் பெண்கள் முதலாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம் இரண்டாமிடம் – மன்னார் மாவட்டம் மூன்றாமிடம் – முல்லைத்தீவு மாவட்டம்

13வது மாகாண மட்ட ஆண், பெண்களுக்கான கரம் போட்டி Read More »

13வது மாகாண மட்ட ஆண், பெண்களுக்கான சதுரங்க போட்டி

13வது மாகாண மட்ட மட்ட ஆண், பெண்களுக்கான சதுரங்க போட்டி யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்லூரி 06 .07 ஏப்பிரல் 2019 திகதிகளில் இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள் முதலாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம் இரண்டாமிடம் – கிளிநொச்சிமாவட்டம் பெண்கள் முதலாமிடம் – கிளிநொச்சிமாவட்டம் இரண்டாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம்

13வது மாகாண மட்ட ஆண், பெண்களுக்கான சதுரங்க போட்டி Read More »