April 2019

தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர்

தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 18 ஏப்பிரல் 2019 அன்று முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு தெரிவித்தார். வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய தமிழ் சிங்கள […]

தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – ஆளுநர் Read More »

கௌரவ ஆளுநருக்கும் கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஈரான் தூதுவர் ஆகியோருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்    டிவோய்ட் மக்கினன் அவர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் கனேடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ள கூடியதான அபிவிருத்தி உதவிகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கனேடிய அரசாங்கத்தின் ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளரின் இலங்கை வருகை குறித்தும், இவ்வருகையின்போது கனேடிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்க கூடியதான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இதேவேளை கௌரவ ஆளுநர் அவர்களுக்கும் இலங்கைக்கான ஈரானின் தூதுவர்

கௌரவ ஆளுநருக்கும் கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஈரான் தூதுவர் ஆகியோருக்குமிடையில் சந்திப்பு Read More »

சிங்கள தமிழ் புத்தாண்டை அனுஸ்டிக்கும் முகமாக பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் ஒரு புதிய பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் முகமாக சிங்களம் / தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டது. இதற்கிணங்க, கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் வளாகத்தில் பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி மற்றும் அலுவலர்களின் பங்களிப்புடன் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. இந் நிகழ்வானது சுப முகூர்த்த வேளையான 15.04.2019 ஆம் திகதி காலை 11.17 மணியளவில் நடைபெற்றது.

சிங்கள தமிழ் புத்தாண்டை அனுஸ்டிக்கும் முகமாக பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டது Read More »

நெல்லியடி பொதுச்சந்தையில் நடமாடும் சேவை

யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தினரின் ஏற்பாட்டில் நெல்லியடி பொதுச்சந்தையில் விவசாயிகள், அலுவலக, பாடசாலை மற்றும் வீட்டுத்தோட்டச் செய்கையாளர்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் சேவையானது 10.04.2019 (புதன்கிழமை) அன்று காலை 7.30 மணி முதல் 11.30 மணிவரை யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நடமாடும் சேவையில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அவர்களின் ஆதரவுடன் பயிர்ச் சிகிச்சை முகாம் நடாத்தப்பட்டது. இப் பயிர்ச் சிகிச்சை முகாமில் நோய்

நெல்லியடி பொதுச்சந்தையில் நடமாடும் சேவை Read More »

புதிய விவசாயத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் வயல் விழா மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் யாழ்ப்பாணம்

திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பல்வேறு புதிய விவசாயத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் வயல் விழா 09.04.2019ம் திகதி பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். மாகாண நன்னீர் மீன் வளர்ப்புப் பிரிவின் பணிப்பாளர் பி.முகுந்தன், மாகாண விவசாய அமைச்சின் பிரதம கணக்காளர் திருமதி.ம.வசந்தமாலா மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆ.சாந்தசீலன் அவர்களும், மாகாண விவசாயத் திணைக்கள

புதிய விவசாயத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் வயல் விழா மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் யாழ்ப்பாணம் Read More »

ஆளுநரின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

2019 ஆம் ஆண்டிலே மலரும் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். போருக்கு பின் பத்தாண்டுகள் கடந்து செல்கின்ற இந்த நிலையில் சமுதாய, கலாசார, அரசியல் ரீதியாக ஒவ்வொருவருடைய உரிமைகளும், பொறுப்புக்களும் கிடைக்கப்பெற வேண்டிய ஒரு வருடமாக அமைய வேண்டுமென்று நான் பிரார்த்திக்கின்றேன். எமது மக்கள் எல்லோரும் ஒன்றாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையும், இலங்கை ஒரு சுபீட்சமடைந்த தேசமாகவும் மாறுவதற்கான வாய்ப்புக்களுக்கான அடித்தளம் எடுக்கக்கூடிய ஒரு வருடமாகவும் இபபுத்தாண்டு மலரட்டும். நாட்டு மக்கள்

ஆளுநரின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி Read More »

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு கௌரவ ஆளுநர் விஜயம்

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு இன்று (11) முற்பகல் விஜயம் செய்த கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டார். ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்களை ஆலய பிரதம குருக்கள் மகாராஜஸ்ரீ டி.எஸ். இரத்தினசபாபதி அவர்கள் வரவேற்றதுடன் ஆளுநர் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். இதன்போது ஆலயத்தின் குறைபாடுகள் மற்றும் ஆலயத்தின் அபிவிருத்தி தேவைகள் குறித்தும் ஆளுநர் அவர்கள் கேட்டறிந்துகொண்டார். – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு கௌரவ ஆளுநர் விஜயம் Read More »

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு ஆளுநர் விஜயம்

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 11 ஏப்பிரல் 2019 அன்று காலை விஜயம் செய்தார். கீரிமலை நகுலேஸ்வரத்தினை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின்போது கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அரச அதிகாரிகளுடனும் ஆளுநர் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த கலந்துரையாடலின் பின்னர் ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கீரிமலை புனித ஸ்தலம் இலங்கையின் வரலாற்றில் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாகும். ஆலயத்திலுள்ள

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »

நடமாடும் விற்பனை மூலம் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றகளின் விற்பனை தொடர்பான விபரங்கள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் வவுனியா மாவட்டத்தில் இயங்கும் அரச விதை உற்பத்திப்பண்ணை, 05 மாவட்டங்களிலும் இயங்கும் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்கள் மற்றும் அச்சுவேலி பூங்கனியியல் கருமூல வள நிலையம் என்பனவற்றில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராகவிருக்கும் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகள் என்பன நடமாடும் சேவை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள், அலுவலகத் தோட்டங்கள் என்பனவற்றினை அமைத்தலையும் அவற்றினை மேம்படுத்தலையும் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் இவ் நடமாடும்

நடமாடும் விற்பனை மூலம் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றகளின் விற்பனை தொடர்பான விபரங்கள் Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம்

ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் 10 ஏப்பிரல் 2019 அன்று நடைபெற்றது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் Read More »