March 2019

வடமாகாணத்தின் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆளுநர் நடவடிக்கை

வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தீர்மானித்துள்ளார். வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது பாடசாலைகளை  தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அனுமதியினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை அண்மைக்காலமாக ஆளுநரிடம் முன்வைத்து வருகின்ற நிலையிலேயே கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தினை எடுத்துள்ளார். ஏனைய எட்டு மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகள் 2 […]

வடமாகாணத்தின் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆளுநர் நடவடிக்கை Read More »

வடமாகாணத்தின் முன்மாதிரியான செயற்பாடு

வடக்கு மாகாணத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை(PSDG) மற்றும் பிரமாண அடிப்படையிலான கொடை(CBG) மூலம் வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூலதன அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் வேலைகள் நிறைவடைந்தும் திறைசேரியிடம் இருந்து கட்டுநிதியானது முழுமையாக கிடைக்கப்பெறாமையினால் ஒப்பந்தகாரர்களிற்கு கொடுப்பனவு செய்யப்பட முடியாமல் இருந்த உறுதிச்சிட்டைகளின் பெறுமதியானது ரூபா 898.4 மில்லியன் ஆகும். இவ்வாறான பெருந்தொகை நிலுவை ஒப்பந்தகாரர்களின் நிதி இயலுமையை பாதித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற கோரிக்கையை கருத்திற் கொண்டு ஒப்பந்தகாரர்களின் இடரினை தீர்ப்பதற்காக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன்

வடமாகாணத்தின் முன்மாதிரியான செயற்பாடு Read More »

தேசிய தொழிற் தகைமை (NVQ Level – 3) அடிப்படையில் தொழிற்திறன் அபிவிருத்தி பயிற்சிகளை நிறைவு செய்தோரிற்கான பயிற்சி உபகரணம் மற்றும் ஊக்குவிப்பு படி வழங்கும் நிகழ்வு

தேசிய தொழிற் தகைமை (NVQ Level – 3) அடிப்படையில் தொழிற்திறன் அபிவிருத்தி பயிற்சிகளை நிறைவு செய்தோரிற்கான பயிற்சி உபகரணம் மற்றும் ஊக்குவிப்பு படி வழங்கும் நிகழ்வு கைதடி முதியோர் இல்லக் கலாச்சார மண்டபத்தில் 12 மார்ச் 2019 அன்று நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. அ.பத்திநாதன் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாகவும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி. ரூபினி வரதலிங்கம் அவர்களின் சிபாரிசுக்கும் வழிநடத்தலுக்கும் அமைவாகவும் இந் நிகழ்வானது தொழிற்துறைத் திணைக்களத்தின்

தேசிய தொழிற் தகைமை (NVQ Level – 3) அடிப்படையில் தொழிற்திறன் அபிவிருத்தி பயிற்சிகளை நிறைவு செய்தோரிற்கான பயிற்சி உபகரணம் மற்றும் ஊக்குவிப்பு படி வழங்கும் நிகழ்வு Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம் – 13 மார்ச் 2019

ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் 13 மார்ச் 2019 அன்று நடைபெற்றது. இந்த பொதுமக்கள் சந்திப்பித்தின்போது ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டும் என்று கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் எழுத்துமூலம் நேரடியாக இதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் கையளித்தனர். மேலும் வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக சங்கத்தின் பிரதிநிதிகள்

ஆளுநரின் பொதுமக்கள் தினம் – 13 மார்ச் 2019 Read More »

சர்வதேச மகளிர் தினம் – 2019

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் ‘நல்வாழ்வுக்கான சமத்துவம்’ எனும் சர்வதேச கருப்பொருளுடன் சர்வதேச மகளிர் தினம் 2019.03.08 அன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள், தொழிற்றுறை, அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எழுத்தாளர், கவிஞர், ஓய்வு பெற்ற அதிபர் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக

சர்வதேச மகளிர் தினம் – 2019 Read More »

கேள்விகள் மற்றும் பெறுகைகள்

திகதி கேள்விகள் / பெறுகைகள் கேள்வி / பெறுகை இலக்கம். 12.03.2019 விலைக்கேள்விக்கான கோரல் – கல்விஅமைச்சு, இசுறுபாய. கட்டடங்கள் திணைக்களம்,வடமாகாணம். “அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டம்” IFB-2019/03(ஆங்கிலம்) IFB-2019/03(தமிழ்) 12.03.2019 விலைக்கேள்விக்கான கோரல் – கல்விஅமைச்சு, இசுறுபாய. கட்டடங்கள் திணைக்களம்,வடமாகாணம். “அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டம்” IFB-2019/04(ஆங்கிலம்) IFB-2019/04(தமிழ்)

கேள்விகள் மற்றும் பெறுகைகள் Read More »

வடமாகாணத்தில் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான தகவல் சேகரிப்பும் ஆய்வும்

வடமாகாணத்தில் விவசாயத்துறை தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காகவும் ஆய்வினை மேற்கொள்ளும் பொருட்டு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினரான கசோக் சிராய் (சந்தை நோக்கிய விவசாய நடவடிக்கைகளுக்கான பொறுப்பதிகாரி) மற்றும் JICA நிறுவனத்தின் சிரேஸ்ட ஒருங்கிணைப்பாளர் கலாநிதி.ஏ.செனவிரட்ன ஆகியோர் 08.03.2019 ஆம் திகதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினருடன் ஏறத்தாழ 03 மணித்தியாலங்கள் கலந்துரையாடி தேவையான விவசாயம்சார் தகவல்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

வடமாகாணத்தில் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான தகவல் சேகரிப்பும் ஆய்வும் Read More »

வெப்பத்தாக்கம் காரணமாக ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்தல்

”வெப்பத்தாக்கம் காரணமாக ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்தல்”  தொடர்பான அறிவுறுத்தல் ஒன்றை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடமாகாணம் அவர்கள் வழங்கியுள்ளார்.  

வெப்பத்தாக்கம் காரணமாக ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்தல் Read More »