March 2019

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்சத்திர சிகிச்சை விடுதி திறந்து வைப்பு

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் முதன் முதலாகக் கண் சத்திரசிகிச்சை விடுதி 22 மார்ச் 2019 அன்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் அவர்களால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இதுவரைகாலமும் நோயாளர்கள் கண் சத்திர சிகிச்சைகளுக்காக கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்குச் சென்று வைத்திய சிகிச்சைகளைப் பெற்று வந்தனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.காண்டீபன் அவர்கள் சுகாதார அமைச்சிற்கு கோரிக்கை விடுத்ததன் பலனாக விசேட கண் […]

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்சத்திர சிகிச்சை விடுதி திறந்து வைப்பு Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம் இம்முறை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது

ஆளுநரின் பொதுமக்கள் தினம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் புதன்கிழமை 27 மார்ச் 2019 அன்று நடைபெறவுள்ளது. வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த பொதுமக்கள் தினம் இடம்பெறவுள்ளது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் இம்முறை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது Read More »

பெறுகைகளுக்கான அறிவித்தல் – வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்

பெறுகைகளுக்கான அறிவித்தல் – வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் வடமாகாணத்தின் 9 பிரதேச வைத்தியசாலைகளுக்கான கணினி வலையமைப்பை வழங்குதல், பொருத்துதல், மற்றும் நிறுவுதலுக்கான பெறுகை – 2019 PDHS/NP/NET/2019

பெறுகைகளுக்கான அறிவித்தல் – வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் Read More »

நாற்று நடுகை கருவி மூலம் நடுகைசெய்யப்பட்ட நெல்வயல் அறுவடை வயல்விழா

விளைவு அதிகரிப்பை மேம்படுத்துவோம் எனும் நோக்கில் நாற்று நடுகை கருவி மூலம் நடுகை செய்யப்பட்ட நெல்வயல் அறுவடை வயல்விழா 20.3.2019 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் ஆள்காட்டிவெளி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் வண்ணாகுளம் மற்றும் குமனாயன்குளம் ஆகிய நெல் வயல்களில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுகூர் அவர்களின் ஏற்பாட்டில் ஆள்காட்டிவெளி விவசாயப் போதனாசிரியர் திருமதி.ளு.து.இமல்டா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும்,

நாற்று நடுகை கருவி மூலம் நடுகைசெய்யப்பட்ட நெல்வயல் அறுவடை வயல்விழா Read More »

திரிபீடகாபிவந்தனா வாரத்தினை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது

திரிபீடகாபிவந்தனா வாரத்தினை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் நாக விகாரையில் 21 மார்ச் 2019 அன்ற முற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு நாளை மறுதினம் 23 ஆம் திகதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கண்டியில் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு

திரிபீடகாபிவந்தனா வாரத்தினை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது Read More »

நடமாடும் சேவை மூலம் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகளின் விற்பனை தொடர்பான விபரங்கள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் வவுனியா மாவட்டத்தில் இயங்கும் அரச விதை உற்பத்திப்பண்ணை, 05 மாவட்டங்களிலும் இயங்கும் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்கள் மற்றும் அச்சுவேலி பூங்கனியியல் கருமூல வள நிலையம் என்பனவற்றில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராகவிருக்கும் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகள் என்பன நடமாடும் சேவை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள், அலுவலகத் தோட்டங்கள் என்பனவற்றினை அமைத்தலையும் அவற்றினை மேம்படுத்தலையும் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் இவ் நடமாடும்

நடமாடும் சேவை மூலம் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகளின் விற்பனை தொடர்பான விபரங்கள் Read More »

ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை

வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் பிரதம செயலாளர் அவர்களின் வழிகாட்டலில் Stromme Foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் பிரதிப் பிரதம செயலாளர் ஆளணியும் பயிற்சியும் அலுவலகத்தினால் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற நிறைவேற்றுத்தர அதிகாரிகளுக்கு நடாத்தப்பட்ட “ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல்” தொடர்பான பயிற்சிப்பட்டறை. 15.03.2019 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலத்திலும் 16.03.2019 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலத்திலும் நடாத்தப்பட்டது.

ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை Read More »

அனுராதபுர மாவட்டத்திற்கான களவிஜயம் – பூச்சிகள் உட்புகா வலையினால் எல்லைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பினுள் சொட்டுநீர்ப்பாசனத்தின் கீழ் பயிர்ச்செய்கை

உலக வங்கியின் அனுசரணையுடன் அனுராதபுர மாவட்டத்தில் நச்சுவாடாகுளம் என்ற கிராமத்தில் அமுலாக்கப்படும் பூச்சிகள் உட்புகாத வலையினால் எல்லைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பினுள் சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கையினைப் பார்வையிடுவதற்கான வெளிக்களவிஜயம் ஒன்று 14.03.2019 ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டது. இக் களவிஜயமானது விவசாயத் துறையின் நவீன மயமாக்கல் திட்டத்தின் வடமாகாணத்திற்கான பிரதி மாகாண திட்டப்பணிப்பாளர் க.பத்மநாதன் மற்றும் விவசாய நிபுணர் விஜிதரன், யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.

அனுராதபுர மாவட்டத்திற்கான களவிஜயம் – பூச்சிகள் உட்புகா வலையினால் எல்லைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பினுள் சொட்டுநீர்ப்பாசனத்தின் கீழ் பயிர்ச்செய்கை Read More »

புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் “கொவிபொல” தொடர்பான பயிற்சிப் பட்டறை

புவிசார் இடம் அறியும் முறமையினைப் பயன்படுத்தி பயிர்உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் கொவிபொல தொடர்பான பயிற்சிப் பட்டறை கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 14.03.2019 ஆம் திகதி புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் (Global Positioning System) மற்றும் கொவிபொல (Govipola) தொடர்பான பயிற்சிப் பட்டறையானது மாகாண விவசாயத் திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாகாண விவசாயத் திணைக்களத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கு நடாத்தப்பட்டது. மேற்படி இரு பயிற்சிப்

புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் “கொவிபொல” தொடர்பான பயிற்சிப் பட்டறை Read More »

நாற்று நடல் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்ச் செய்கை சம்பந்தமான வயல்விழா

நாற்று நடல் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை சம்பந்தமான வயல்விழா 15 மார்ச் 2019 அன்று வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் பதில் உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி சூ.ஜெகதீஸ்வரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள், வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் இவ்வயல்விழாவில் பங்குபற்றியிருந்தனர். வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையின் பண்ணை முகாமையாளர் அவர்கள் நெற்பயிர்ச் செய்கையில்

நாற்று நடல் இயந்திரத்தின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்ச் செய்கை சம்பந்தமான வயல்விழா Read More »