March 2019

வடமாகாண பௌத்த மாநாடு வவுனியா ஸ்ரீபோதி தட்சிணாராம விகாரையில் சிறப்பாக நடைபெற்றது.

வடமாகாண பௌத்த மாநாடு வவுனியா ஸ்ரீபோதி தட்சிணாராம விகாரையில் 29 மார்ச் 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. வடமாகாணத்தில் காணப்படும் பௌத்த விகாரைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட பிரச்சனைகள் தொடர்பில் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டதுடன் வடமாகாணத்தில் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் , கைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன , வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் […]

வடமாகாண பௌத்த மாநாடு வவுனியா ஸ்ரீபோதி தட்சிணாராம விகாரையில் சிறப்பாக நடைபெற்றது. Read More »

கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான சிற்றூழியர்கள் கௌரவ ஆளுநரினால் நியமிக்கப்பட்டனர்

கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான பத்து சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 2019/03/27 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது வழங்கிவைக்கப்பட்டன. இந் நிகழ்வில் அ.பத்திநாதன், பிரதம செயலாளர் வடக்கு மாகாணம், எல்.இளங்கோவன், செயளாலர், ஆளுநர் செயலகம், வடக்கு மாகாணம், திருமதி.ரூபினி வரதலிங்கம், செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், திருமதி.வனஜா செல்வரட்ணம், மாகாணப் பணிப்பாளர், சமூக சேவைகள்

கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான சிற்றூழியர்கள் கௌரவ ஆளுநரினால் நியமிக்கப்பட்டனர் Read More »

ஆளுநரின் விசேட ஊடக அறிக்கை

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் விசேட ஊடக அறிக்கை  ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றில் நான் பங்குபற்றியது தொடர்பான எனது ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் திரிவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்மை ஆழ்ந்த வருத்தத்திற்குரியதும் துரதிஸ்டவசமானதுமாகும். விசேடமாக ஆங்கில ஊடகங்கள், என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கு அல்லது நோக்கத்திற்கு மாறாக வெளியிடப்பட்டமைக்கு மொழியாக்கம் அல்லது வேறு விடயங்கள் காரணமாக அமைந்திருக்கலாம். எல்லா கலந்துரையாடல்களும் முழுமையான இருதரப்பு ஆதரவுடன்

ஆளுநரின் விசேட ஊடக அறிக்கை Read More »

கால்நடை பண்ணையாளர்களுக்கான அறிவித்தல்

1958ம் ஆண்டின் 29ம் இலக்க சட்டத்தின் கீழ் சகல விலங்கு பண்ணைகளும் (ஆடு , மாடு, செம்மறி, பன்றி, எருமை, கோழி) பண்ணை அமைந்துள்ள கால்நடை வைத்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். பண்ணைகளை பதிவு செய்வதற்கும் மாடுகளுக்கு காது அடையாளமிடுவதற்கும் தேவையான விண்ணப்ப படிவங்களை (விலங்கு பண்ணைகளை பதிவு செய்தல், மற்றும் அட்டவணை 7) தங்கள் பிரிவிலுள்ள கால்நடை வைத்திய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும். இப்பண்ணைகளை பதிவதன் மூலம் 1. விலங்குகளின் உரித்தை உறுதிப்படுத்தலாம் 2.

கால்நடை பண்ணையாளர்களுக்கான அறிவித்தல் Read More »

வடமாகாண பௌத்த மாநாடு வவுனியாவில் நடைபெறவுள்ளது

வடமாகாண பௌத்த மாநாடு 29 மார்ச் 2019 அன்று வவுனியா ஸ்ரீ போதி தட்சிணாராம விகாரையில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரதம சங்கைக்குரிய நாயக்கர் வவுனியா மாவட்ட கௌரவ தலைவர் பூஜ்ஜிய சியம்பலா கஸ்வௌ விமலசார தேரர் அவர்கள் , புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இந்த பௌத்த மாநாடு நடைபெறவுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்படும் வடமாகாண பௌத்த

வடமாகாண பௌத்த மாநாடு வவுனியாவில் நடைபெறவுள்ளது Read More »

நடமாடும் விற்பனை சேவை

யாழ்ப்பாண பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தினரின் ஏற்பாட்டில் மருதனார்மடம் பொதுச்சந்தையில் விவசாயிகள், அலுவலக, பாடசாலை மற்றும் வீட்டுத் தோட்டச்செய்கையாளர்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் சேவையானது 26.03.2019 யாழ் .மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள் மற்றும் அலுவலகத் தோட்டங்கள் என்பவற்றை அமைப்பதற்கும் அவற்றினை மேம்படுத்துவதற்கும் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் அச்சுவேலியில் அமைந்துள்ள பூங்கனியியல் கரு மூலவள நிலையம்

நடமாடும் விற்பனை சேவை Read More »

யாழ் மறைமாவட்ட ஆயர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் யாழ் ஆயர் இல்லத்தில் இன்று (28) முற்பகல் சந்தித்தார். யாழ்  மறைமாவட்ட   மற்றும் வடமாகாணத்தில் உள்ள கத்தோலிக்க சமயத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , மத ரீதியான பிரச்சனைகளை எவ்வாறு தீர்வுக்கு கொண்டுவரமுடியும் என்பது தொடர்பாக இருவருக்குமிடையிலான இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. மேலும், வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்களில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள கத்தோலிக்க ஆலயங்கள் மற்றும் ஏனைய மத

யாழ் மறைமாவட்ட ஆயர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

கிளிநொச்சியில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்

ஆளுநரின் பொதுமக்கள் தினம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 27 மார்ச் 2019 அன்று நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாணத்தின் அரச முதியோர் இல்லத்திற்கான  ஆரம்ப தர உத்தியோகத்தர்கள் பத்து பேருக்கான  நியமனக்கடிதங்கள் ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்டன. குறித்த பதவிநிலைக்காக 14பேர் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் 10 பேர் மட்டுமே இன்று வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

கிளிநொச்சியில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் Read More »

கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தின் உற்பத்திகளை வடமாகாண அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்ய ஆளுநர் நடவடிக்கை

வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாக கொண்டு கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை வடமாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்வதற்கான பணிப்புரையை வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தீர்மானித்துள்ளார். 26 மார்ச் 2019 அன்று காலை திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்திற்கான திடீர் கண்காணிப்பு விஜயத்தின்போது அம்மாச்சி உணவகத்தின் நுழைவாயில் பகுதியில் கருவி நிறுவனத்தின் உற்பத்திகளை விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளி ஒருவருரை சந்திக்கும் சந்தர்ப்பம் ஆளுநர்

கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தின் உற்பத்திகளை வடமாகாண அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்ய ஆளுநர் நடவடிக்கை Read More »

13வது மாகாண மட்ட டேக்வாண்டோ போட்டி

13வது மாகாண மட்ட மட்ட ஆண், பெண்களுக்கான டேக்வாண்டோ போட்டி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 23, 24 March 2019 அன்று இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

13வது மாகாண மட்ட டேக்வாண்டோ போட்டி Read More »