விவசாய அமைச்சு

வனமரங்கள் நடுகை நிகழ்ச்சித்திட்டம்

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு நெடுங்கேணி, கனகராயன்குளம், பம்பைமடு, உளுக்குளம் மற்றும் செட்டிக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் வனமரங்கள் நடுகை நிகழ்ச்சித்திட்டமொன்று கடந்த 07.10.2019, 08.10.2019 மற்றும் 10.10.2019 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்டன. இதன்போது நதிப்படுக்கைகளை அண்மித்த பகுதிகளிலும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் ஏறத்தாழ 2000 மரங்கள் நாட்டப்பட்டன. இம் மரநடுகை நிகழ்வில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர் .  

வனமரங்கள் நடுகை நிகழ்ச்சித்திட்டம் Read More »

நெல் நாற்று நடுகைத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பு

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு ஓமந்தை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கடந்த 08.10.2019 ஆம் திகதியன்று நெல் நாற்று நடுகைத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பொன்று நடாத்தப்பட்டது. வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் விவசாயிகள் சேற்று விதைப்பையே அதிகம் மேற்கொண்டு வருவதுடன் நாற்று நடுகை முறையை மிக அரிதாகவே பின்பற்றுகின்றனர. ஆனால் ஏனைய விதைப்பு முறைகளிலும் நாற்று நடுகைத் தொழில்நுட்பமானது அதிக விளைச்சலைத் தருவதுடன், ஏக்கருக்குத் தேவையான விதை நெல்லின் அளவும் குறைவு. மேலும் இது நோய்த்

நெல் நாற்று நடுகைத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பு Read More »

மாமரம் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிநெறி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு பாவற்குளம் பகுதியில் கடந்த 09.10.2019 ஆம் திகதியன்று மாமரத்தில் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிநெறியொன்று நடாத்தப்பட்டது. பொதுவாக கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் செயன்முறையானது மாமரத்தின் இரண்டாவது வளர்ச்சிப் பருவத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் தாவரத்தில் சூரியஒளி படும் அளவு அதிகரிக்கப்படுவதுடன், நோய் பீடைத் தாக்கங்களும் குறைக்கப்படுகிறது. மேலும் நோய்த் தாக்கமுற்ற தாவரப் பாகங்கள் அகற்றப்படுவதுடன் தாவரமானது பராமரிக்கக் கூடிய உயரத்தில் பேணப்படுகிறது. இதன் விளைவாக மாமரத்தில் காய் கொள்ளும் தன்மை

மாமரம் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிநெறி Read More »

பயிர்ச்சிகிச்சை முகாம்

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு விசேட பயிர்ச்சிகிச்சை முகாமொன்று வவுனியா சந்தை வட்டாரத்தில் கடந்த 11.10.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. இச் சந்தை வட்டார பயிர்ச் சிகிச்சை நிகழ்ச்சித் திட்டமானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 4.30 மணி முதல் காலை 7.30 மணி வரை குறித்த இடத்தில் நடாத்தப்பட்டுவருகிறது. இதன்போது பயிர்ச்செய்கையாளர்கள் தாவர வைத்தியர்களுடன் தாம் பயிர்ச்செய்கையில் எதிர்கொள்ளும் நோய், பீடைத் தாக்கங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு உரிய தீர்வுகளைப் பெற்றுச் செல்கின்றனர்.

பயிர்ச்சிகிச்சை முகாம் Read More »

“கபிலநிறத் தத்தியின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைத் துண்டத்தின் வயல்விழா”

கபிலநிறத் தத்தியின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைத் துண்டத்தின் வயல்விழா 02.10.2019 ஆம் திகதி அன்று உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பண்ணை முகாமையாளர்; க.மதனராஜ் குலாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுகூறு அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். இவ் வயல் விழாவில் வலய உதவிப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், உதவிப் பண்ணை முகாமையாளர், விவசாயப் போதனாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,

“கபிலநிறத் தத்தியின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைத் துண்டத்தின் வயல்விழா” Read More »

பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான வயல் விழா

ஓமந்தையிலுள்ள காயாங்குளம் எனும் இடத்தில் பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான வயல் விழா 01.10.2019 ஆம் திகதியன்று நடாத்தப்பட்டது. வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் சிறிய வெங்காயச் செய்கை பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டாலும், பெரிய வெங்காயச் செய்கையானது ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்தளவிலான விஷ்தீரணத்திலேயே மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. எனவே பெரிய வெங்காயச் செய்கைத் தொழில்நுட்பத்தை விவசாயிகள் மத்தியில் விரிவுபடுத்தும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தன் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பெரியவெங்காயவிதை வழங்கப்பட்டு, விவசாயப் போதனாசிரியர்களின் ஆலோசனைகளின் கீழ் பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது

பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான வயல் விழா Read More »

நடமாடும் விற்பனை மூலம் மரக்கறி நாற்றுக்கள் பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றகளின் விற்பனை தொடர்பான விபரங்கள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் அரச விதை உற்பத்திப்பண்ணை, ஐந்து மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்கள் மற்றும் பூங்கனியியல் கருமூல வள நிலையம் என்பனவற்றில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராகவிருக்கும் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகள் என்பன நடமாடும் சேவை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள், அலுவலகத் தோட்டங்கள் என்பனவற்றினை அமைத்தலையும் அவற்றினை மேம்படுத்துவதற்குத் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் இவ் நடமாடும் விற்பனையானது நடைபெற்று வருகின்றது. மேலும் பசுமையான நாட்டினைக் கட்டியெழுப்புவதற்குத்

நடமாடும் விற்பனை மூலம் மரக்கறி நாற்றுக்கள் பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றகளின் விற்பனை தொடர்பான விபரங்கள் Read More »

விவசாயக் கண்காட்சி 2019 – யாழ்ப்பாணத்தில் 17 செப்ரெம்பர் தொடக்கம் 20 செப்ரெம்பர் வரை நடைபெறும்

யாழ்ப்பாணம் பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் 17.09.2019 ஆம் திகதி தொடக்கம் 20.09.2019 ஆம் திகதி வரையான 4 நாட்கள் “காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி” என்னும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி – 2019 காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியின் தொடக்க நிகழ்வு 17.09.2019 ஆம் திகதி

விவசாயக் கண்காட்சி 2019 – யாழ்ப்பாணத்தில் 17 செப்ரெம்பர் தொடக்கம் 20 செப்ரெம்பர் வரை நடைபெறும் Read More »

பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு பாத்தீனியம் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் வவுனியா விவசாயக் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக கடந்த 10.10.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. இதன்போது பொறுப்பான பாத்தீனியம் உத்தியோகத்தரின் வழிகாட்டலின் கீழ் விவசாயக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மேற்படி பாத்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  

பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி Read More »

தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு உளுக்குளம் விவசாயபோதனாசிரியர் பிரிவில் கடந்த 08.10.2019 ஆம் திகதி அன்று தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறியொன்று நடாத்தப்பட்டது. இதன் போது தேனீ குடித்தொகையை பேணுதல், பிரித்தல், பீடைத் தகக்கங்களிலிருந்து பாதுகாத்தல் போன்றன தொடர்பான செயன்முறை விளக்கங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. தேனீ வளர்பானது வவுனியா மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எனினும் மிகக் குறைந்தளவிலான முயற்சியாளர்களே மேற்படி தேனீவளர்ப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் மேலும் முயற்சியாளர்களை

தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறி Read More »