வவுனியா மாவட்டத்தில் சேதனப்பசளை மற்றும் சேதன பீடை நாசினி உற்பத்தித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கி வைத்தல்.
வவுனியா மாவட்டத்தில் சேதனப் பசளை மற்றும் சேதனப் பீடைநாசினி உற்பத்தியினை அதிகரிக்கும் முகமாக சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தித் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 27.01.2022 ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு. மு. திலீபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், திரு. ளு. சிவகுமார், மாகாண விவசாயப் […]
