விவசாய அமைச்சு

நடமாடும் விற்பனை மூலம், மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகளின் விற்பனை தொடர்பான விபரங்கள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் அரச விதை உற்பத்திப் பண்ணை, ஐந்து மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்கள் மற்றும் பூங்கனியியல் கருமூல வள நிலையம் என்பனவற்றில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராகவிருக்கும் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகள் என்பன நடமாடும் சேவை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள், அலுவலகத் தோட்டங்கள் என்பனவற்றினை அமைத்தலையும் அவற்றினை மேம்படுத்துவதற்குத் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் இவ் நடமாடும் விற்பனையானது நடைபெற்று வருகின்றது. மேலும் பசுமையான […]

நடமாடும் விற்பனை மூலம், மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகளின் விற்பனை தொடர்பான விபரங்கள் Read More »

பெரும் போகம் 2019 / 2020 இற்கான விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் – வடமாகாணம்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் கடந்த சிறு போகத்தைப் போன்று இக்கால போகத்திலும் (பெரும் போகம்) மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்ட மானது அமுல்படுத்தப் பட்டுள்ளது. விவசாயத் துறை மீதான இளைஞர்களின் ஆர்வம் குறைந்து வருவதாக கருதப்படுகின்ற இக்காலகட்டத்தில் பெரும் போக பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு புத்துயிரளித்து இளையோரை விவசாயத்தில் நாட்டம் கொள்ளச் செய்கின்ற வகையில் மாகாண விவசாயத் திணைக்களமானது ஒக்டோபர் 7 தொடக்கம் ஒக்டோபர் 12 வரையான காலத்தை விசேட விவசாய ஊக்குவிப்பு

பெரும் போகம் 2019 / 2020 இற்கான விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் – வடமாகாணம் Read More »

பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு கோவில்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் அந்நிய ஆக்கிரமிப்புக் களையான பாத்தீனியம் தொடர்பாக விழிப்புணர்வுப் பேரணி ஒன்று 12.10.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. பாத்தீனியமானது பயிர் மற்றும் மேய்ச்சல் களையாக விளங்குவதுடன் மனிதர்களிலும், கால்நடைகளிலும் ஒவ்வாமைகளையும், சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தவல்லது. களைகொல்லிகளைத் தாங்கிவளரும் இந் நச்சுக் களைகளானது பயிர் உற்பத்தியில் பாரியபின்னடைவை ஏற்படுத்துவதுடன் விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகின்றது. இந் நிலையில் இந் நச்சுக் களை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை

பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி Read More »

சூரியக் கலத் தொகுதியுடன் கூடிய பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பம்

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு பாவற்குளம் பகுதியில் கடந்த 09.10.2019 ஆம் திகதியன்று சூரியக் கலத் தொகுதியுடன் கூடிய பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பம் (Solar energy  integrated crop cultivation) தொடர்பில் பயிற்சிநெறியொன்று நடாத்தப்பட்டது. தற்காலத்தில் மிக ஆழமான நீர் முதல்களிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்வதற்கு இலவச சக்தியாக சூரிய சக்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சிலவேளைகளின் இதன் மூலம் கிடைக்கப்பெறும் மேலதிக ஈட்டம் வீட்டுத் தேவைக்காகவும் விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது. இச் சூரிய சக்தியைப் பயன்படுத்தி நீரை குறைந்தது 40 அடி உயரத்திற்கு

சூரியக் கலத் தொகுதியுடன் கூடிய பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பம் Read More »

காளானிலிருந்து உணவு தயாரிப்பு முறைகள் தொடர்பான செயன்முறை விளக்க பயிற்சிநெறி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு கோவிற்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் காளானிலிருந்து உணவு தயாரிப்பு முறைகள் தொடர்பான செயன்முறை விளக்க பயிற்சிநெறி 12.10.2019 அன்று நடாத்தப்பட்டது. இதன்போது 5 வகையான சமையல் குறிப்புக்கள் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. காளான் உணவுகள் அதிகளவு புரதத்தைக் கொண்டிருப்பதுடன் புற்றுநோய் மற்றும் கொலஸ்திரோல் போன்ற நோய்களுக்கெதிராக மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. இவை விட்டமின் – E இனை அதிகளவில் கொண்டுள்ளது. கலமுதிர்ச்சியைத் தடுத்து இளமையானதோற்றத்தை வழங்குகின்றது. கலமீளுருவாக்கத்தை தூண்டுகிறது. இப் பயிற்சிநெறியில் அப்

காளானிலிருந்து உணவு தயாரிப்பு முறைகள் தொடர்பான செயன்முறை விளக்க பயிற்சிநெறி Read More »

வனமரங்கள் நடுகை நிகழ்ச்சித்திட்டம்

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு நெடுங்கேணி, கனகராயன்குளம், பம்பைமடு, உளுக்குளம் மற்றும் செட்டிக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் வனமரங்கள் நடுகை நிகழ்ச்சித்திட்டமொன்று கடந்த 07.10.2019, 08.10.2019 மற்றும் 10.10.2019 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்டன. இதன்போது நதிப்படுக்கைகளை அண்மித்த பகுதிகளிலும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் ஏறத்தாழ 2000 மரங்கள் நாட்டப்பட்டன. இம் மரநடுகை நிகழ்வில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர் .  

வனமரங்கள் நடுகை நிகழ்ச்சித்திட்டம் Read More »

நெல் நாற்று நடுகைத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பு

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு ஓமந்தை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கடந்த 08.10.2019 ஆம் திகதியன்று நெல் நாற்று நடுகைத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பொன்று நடாத்தப்பட்டது. வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் விவசாயிகள் சேற்று விதைப்பையே அதிகம் மேற்கொண்டு வருவதுடன் நாற்று நடுகை முறையை மிக அரிதாகவே பின்பற்றுகின்றனர. ஆனால் ஏனைய விதைப்பு முறைகளிலும் நாற்று நடுகைத் தொழில்நுட்பமானது அதிக விளைச்சலைத் தருவதுடன், ஏக்கருக்குத் தேவையான விதை நெல்லின் அளவும் குறைவு. மேலும் இது நோய்த்

நெல் நாற்று நடுகைத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பு Read More »

மாமரம் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிநெறி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு பாவற்குளம் பகுதியில் கடந்த 09.10.2019 ஆம் திகதியன்று மாமரத்தில் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிநெறியொன்று நடாத்தப்பட்டது. பொதுவாக கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் செயன்முறையானது மாமரத்தின் இரண்டாவது வளர்ச்சிப் பருவத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் தாவரத்தில் சூரியஒளி படும் அளவு அதிகரிக்கப்படுவதுடன், நோய் பீடைத் தாக்கங்களும் குறைக்கப்படுகிறது. மேலும் நோய்த் தாக்கமுற்ற தாவரப் பாகங்கள் அகற்றப்படுவதுடன் தாவரமானது பராமரிக்கக் கூடிய உயரத்தில் பேணப்படுகிறது. இதன் விளைவாக மாமரத்தில் காய் கொள்ளும் தன்மை

மாமரம் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிநெறி Read More »

பயிர்ச்சிகிச்சை முகாம்

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு விசேட பயிர்ச்சிகிச்சை முகாமொன்று வவுனியா சந்தை வட்டாரத்தில் கடந்த 11.10.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. இச் சந்தை வட்டார பயிர்ச் சிகிச்சை நிகழ்ச்சித் திட்டமானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 4.30 மணி முதல் காலை 7.30 மணி வரை குறித்த இடத்தில் நடாத்தப்பட்டுவருகிறது. இதன்போது பயிர்ச்செய்கையாளர்கள் தாவர வைத்தியர்களுடன் தாம் பயிர்ச்செய்கையில் எதிர்கொள்ளும் நோய், பீடைத் தாக்கங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு உரிய தீர்வுகளைப் பெற்றுச் செல்கின்றனர்.

பயிர்ச்சிகிச்சை முகாம் Read More »

“கபிலநிறத் தத்தியின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைத் துண்டத்தின் வயல்விழா”

கபிலநிறத் தத்தியின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைத் துண்டத்தின் வயல்விழா 02.10.2019 ஆம் திகதி அன்று உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பண்ணை முகாமையாளர்; க.மதனராஜ் குலாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுகூறு அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். இவ் வயல் விழாவில் வலய உதவிப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், உதவிப் பண்ணை முகாமையாளர், விவசாயப் போதனாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,

“கபிலநிறத் தத்தியின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைத் துண்டத்தின் வயல்விழா” Read More »