உலர் வலயத்தில் கறுவா பயிர்ச்செய்கை அறிமுகம் மற்றும் பதப்படுத்தல் செயன்முறை விளக்க நிகழ்வு
நிகழ்வானது 25.07.2024 அன்று மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் வட்டக்கச்சியில் “வளம் தரும் வாசனை பயிரை வரவேற்போம்” எனும் தொனிப்பொருளில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.சூ.ஜெகதீஸ்வரி தலைமையில் காலை 10 மணிக்கு இடம்பெற்றது. 1/4 ஏக்கர் விஸ்தீரணத்தில் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் வைபவ ரீதியான கறுவாச்செடி நடுகை, அதன் பதப்படுத்தல் தொடர்பான செயல்முறை விளக்கங்கள், பயிற்செய்கை முகாமைத்துவம் தொடர்பான தெளிவு படுத்தல்கள் மற்றும் கருவாவிலிருந்து சிற்றுண்டி, தேநீர் தயாரிப்பு […]
