பிரதம செயலாளர் அலுவலகம்

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் பதவியேற்றார்

திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்கள் வடக்கு மாகாண சபையின் பிரதம செலாளராக 26 ஜூலை 2021 அன்று கைதடி வடக்கு மாகாணசபை கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர் கொத்தணியின் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் புதிய பிரதம செயலாளர் அவர்களை பாரம்பரிய முறையில் வரவேற்றனர். புதிய பிரதம செயலாளர் அவர்கள் சமய அனுட்டாணங்களை அடியொற்றி […]

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் பதவியேற்றார் Read More »

நாட்டின் 73 வது சுதந்திர தினம் பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாட்டப்பட்டது

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73 ஆவது சுதந்திர தினம் கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் 04 பெப்ரவரி 2021 அன்று கொண்டாடப்பட்டது. தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் சுற்றுநிருபம் 24/2020 இல் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிநிரலின்படி, பிரதி பிரதம செயலாளர் திரு.ஆர்.பத்மநாதன் அவர்கள் தேசியக் கொடியை மு.ப. 8:00 மணிக்கு ஏற்றிவைத்தார். பின்னர் ”நாட்டிற்கு சுதந்திரத்தின் முக்கியத்துவம்” எனும் தொனிப் பொருளில் உரையாற்றினார். நாட்டின் 73 வது சுதந்திர

நாட்டின் 73 வது சுதந்திர தினம் பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாட்டப்பட்டது Read More »

2020ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் – 30.12.2020

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2020ம் ஆண்டின் மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 30.12.2020 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு பிரதம செயலாளர் திரு. அ. பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

2020ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் – 30.12.2020 Read More »

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புகுமுகப் பயிற்சிநெறி

அண்மையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புகுமுகப் பயிற்சிநெறி ஒன்று முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி அலகினால் 2020.09.14 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டது. பிரதம விருந்தினராக திருமதி. அ.ஸ்ரானலி டிமெல், பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணி மற்றும் பயிற்சி, வடமாகாணம் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி நெறியை ஆரம்பித்துவைத்தார். 10 நாட்களைக் கொண்ட இப் பயிற்சி நெறியானது முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி அலகின் பணிப்பாளர் திரு.வே.ஆயகுலன் தலைமையில் திரு.சு.செந்தூரன், பயிற்சி உத்தியோகத்தர் அவர்களது வரவேற்பு உரையுடன்

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புகுமுகப் பயிற்சிநெறி Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பாலங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் தட்டாமலை வீதிப்பாலம், தண்டுவான் பெரியகுளம் வீதிப்பாலம் மற்றும் நெடுங்கேணி தண்ணி முறிப்பு வீதிப்பாலம் ஆகிய மூன்று பாலங்கள் புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் தவிசாளர் அவர்களால் 20/02/2020 அன்று வைபவரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பாலங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது Read More »

கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட கறுக்காய்தீவு – காவைக்குளம் வீதியில் இரண்டு பாலங்கள், வன்னேரி – பல்லவராயன்கட்டு வீதியில் இரண்டு பாலங்கள் மற்றும் வன்னேரிக்குளம் – ஜெயபுரம் வீதிப்பாலம் ஆகிய ஜந்து பாலங்கள் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் தவிசாளர் அவர்களால் 20 ஜனவரி 2020 அன்று வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.  

கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு Read More »

வவுனியாவில் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கனகராயன்குளம் கரப்புக்குத்தி வீதிப்பாலமானது வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வவுனியா வடக்கு பிரதேசசiபின் தவிசாளர் ச.தணிகாசலம் அவர்களால் 18 செப்ரெம்பர் 2019 அன்று வைபவரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

வவுனியாவில் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது Read More »

வரி மதிப்பீட்டாளர் மற்றும் சாரதி ஆளணிக்கான நியமனக்கடிதங்கள் வழங்கல்

வடக்கு மாகாணத்தில் காணப்பட்ட வரி மதிப்பீட்டாளர் (04) மற்றும் சாரதி (12) ஆகிய ஆளணிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் வைபவம் 2019.08.16 ஆம் திகதி கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகண சபை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ .கலாநிதி. சுரேன் ராகவன் அவர்கள் நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.

வரி மதிப்பீட்டாளர் மற்றும் சாரதி ஆளணிக்கான நியமனக்கடிதங்கள் வழங்கல் Read More »

மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் நடைபெற்றது – 2019

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2019ம் ஆண்டின் 2ம் காலாண்டுக்கான மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 18 யூலை 2019 ஆம் திகதி பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் திரு.அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் வடக்கு மாகாண மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் நடைபெற்றது – 2019 Read More »

அபிவிருத்தி உத்தியோகத்தர் – பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

வடக்குமாகாணத்தில் காணப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் – பயிலுநர் (77), கலாசார உத்தியோகத்தர் (03), பட்டதாரி ஆசிரியர் தகவல் தொழிநுட்பவியல் பாடம் (09) ஆகிய ஆளணிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் வைபவம் 17 யூலை 2019 அன்று மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் – பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன Read More »