பிரதம செயலாளர் அலுவலகம்

யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகத்தின் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு – 2021

வடமாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக, யாழ்ப்பாணம் வலயக் கல்வி அலுவலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாண வலயத்துக்குரிய மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 10.10.2022 அன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களும் ஏனைய அதிதிகளாக யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் […]

யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகத்தின் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு – 2021 Read More »

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் அலகு திறப்பு விழா மற்றும் உபகரணங்கள் கையளிக்கும் வைபவம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் அலகு திறப்பு விழாவும் மற்றும் றோட்டறிக் கழகத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்ட சத்திர சிகிச்சை கூடத்துக்கான மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் 10.10.2022 அன்று திங்கட்கிழமை ஆதார வைத்தியசாலை வைத்தியர் அத்தியட்சகர் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.பந்துலசேன அவர்களும் ஏனைய அதிதிகளாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், தென்மராட்சி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் அலகு திறப்பு விழா மற்றும் உபகரணங்கள் கையளிக்கும் வைபவம் Read More »

சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாண சபையின் நடமாடும் சேவை

முல்லைத்தீவு மாவட்டத்தின் சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாண சபையின் நடமாடும் சேவையானது 28.09.2022 அன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நடமாடும் சேவையானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதல்களுடன், சம்பத்நுவர பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன்  தனித்துவமான 10 இடங்களில் இடம் பெற்றது. இந்நடமாடும் சேவையில் மக்களின் அடிப்படை வசதிகளுக்கான

சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாண சபையின் நடமாடும் சேவை Read More »

KOICA – UNICEF அனுசரணையுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி பாடசாலைகளின் கட்டட கையளிப்பு நிகழ்வு

கொரியா அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யுனிசெப்பினால் அமுல்ப்படுத்தப்படும் KOICA – UNICEF நிகழ்ச்சித் திட்டமானது ரூபா 270 மில்லியன் ஒதுக்கீட்டில் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வடமாகாண கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் வழிகாட்டலின்கீழ் 27 அவசியமான கருத்திட்டங்களை முன்வைத்து செயற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்ட பாடசாலை கட்டடங்களின் கையளிப்பு நிகழ்வு 26.07.2022 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில்

KOICA – UNICEF அனுசரணையுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி பாடசாலைகளின் கட்டட கையளிப்பு நிகழ்வு Read More »

கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போசணை மட்டத்தினை பேணுவதற்கான சத்துணவுப் பொதி வழங்கல்

சரியான போசணை மட்டத்தினை பேணுவதற்கான கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துணவுப்பொதி வழங்கும் நிகழ்வானது கௌரவ ஆளுநர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையின் கீழ் 2022.07.20 அன்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வவுனியா தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலுமிருத்தும் மீன்பிடித் தொழிலில் தங்கியிருக்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அடங்கலாக மந்த போசணையுடைய 924 தாய்மார்களின் அனிமியா பாதிப்பு நிலையினைக்

கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போசணை மட்டத்தினை பேணுவதற்கான சத்துணவுப் பொதி வழங்கல் Read More »

2022ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம்

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2022ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 01.04.2022 ஆம் திகதி A9 வீதி, கைதடி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கௌரவ ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாணம், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண

2022ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் Read More »

2022 ஆண்டிற்கான வடக்கு மாகாண நடமாடும் சேவை ‘உங்கள் வாசலில் நாங்கள்’ – வவுனியா மாவட்டம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. ஜீவன் தியாகராஜா அவர்களின் நெறிப்படுத்தலிலும் மற்றும் பிரதம செயலாளர் திரு. எஸ். எம். சமன் பந்துலசேன அவர்களின் வழிகாட்டலிலும் வடக்கு மாகாண மக்களிற்கான இவ் ஆண்டிற்கான நடமாடும் சேவை வடக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக முதலாவது நடமாடும் சேவை வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு (வ/ஈரற்பெரியகுளம் பரக்கும் மகா வித்தியாலயம்), வெங்கலசெட்டிக்குளம் (வ/அல்-காமியா மகாவித்தியாலயம்), வவுனியா வடக்கு (வ/ஒலுமடு மகா வித்தியாலயம் – நெடுங்கேணி) மற்றும்

2022 ஆண்டிற்கான வடக்கு மாகாண நடமாடும் சேவை ‘உங்கள் வாசலில் நாங்கள்’ – வவுனியா மாவட்டம் Read More »

பிரதம செயலாளர் செயலகத்தின் 2022 ஆண்டிற்கான கடமை ஆரம்ப நிகழ்வு

2022 ஆம் ஆண்டின் முதல் வேலை நாள் கடமைகளை ஆரம்பிக்கும் வைபவம் பிரதம செயலாளர் திரு.எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் 2022 ஜனவரி 03 ஆம் திகதி பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், ஆணையாளர்கள் – மோட்டார் போக்குவரத்து, இறைவரி, பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் தலா 3 அலுவலர்கள் பிரதம செயலாளர் செயலக கொத்தணி அலுவலகங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சார்பில் பிரதம செயலாளர்

பிரதம செயலாளர் செயலகத்தின் 2022 ஆண்டிற்கான கடமை ஆரம்ப நிகழ்வு Read More »

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சீனத் தூதுவர் விஜயம்

சீனத் தூதுவர் ஷீய் ஷன்ஹொங் இலங்கையின் வட மாகாணத்திற்கான தனது முதல் விஜயத்தை யாழ்ப்பாண பொது நூலகத்தில் இருந்து ஆரம்பித்தார். சீனத் தூதுவர் வடமாகாண ஆளுநர் திரு ஜீவன் தியாகராஜா மற்றும் யாழ் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது. மடிக்கணினிகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவை திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும், இதன் சேகரிப்பை பெரிதாக்கவும் வழங்கப்பட்டது

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சீனத் தூதுவர் விஜயம் Read More »

2021ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் நடைபெற்றது

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2021ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 05.08.2021 ஆம் திகதி பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் அலுவலகர்கள் கலந்துகொண்டார்கள்.

2021ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் நடைபெற்றது Read More »