வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு
இச் சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் புதன் கிழமை காலை (04.12.2024) இடம்பெற்றது. கடந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் ஐ.எல்.ஓ. அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ளதாகவும் ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு வடக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கும், ஆளுநருக்கு நன்றி கூறினார். மாவட்டச் செயலராக கடந்த காலங்களில் நான் பணியாற்றியபோது முன்னெடுக்கப்பட்ட திட்டங்களைப்பற்றி நன்கு அறிவேன் எனக் […]
