யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடற்றொழில் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகரன் தலைமையில் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25.03.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் அழைப்புக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அமைச்சர் சந்திரசேகரன், அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நிறைவுசெய்யுமாறு […]
