அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும் -வடக்கு மாகாண ஆளுநர்
அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும். தனியார் துறையினர் இலாபத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டே செயற்படுவர். ஆனால் கூட்டுறவுத்துறை சேவையை அடிப்படையாகக் கொண்டு சிறியதொரு இலாபத்துடன் மாத்திரமே செயற்படும். அதனாலேயே, கூட்டுறவுத்துறையை வலுப்படுத்துவதன் ஊடாக அரிசி மாபியாவை எதிர்காலத்திலாவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இளம் ஆய்வாளர்கள் வலையமைப்பு நடத்திய இளம் கூட்டுறவாளர் மாநாடு தந்தை செல்வா அரங்கில் 10.05.2025 அன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் […]
