தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 15.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. வெளிக்கள நிலையத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஆளுநர் கடந்த காலங்களில் சிறப்பாக இயங்கிய அந்த நிலையத்தை நெறிப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன் இடையில் ஏற்பட்ட குழப்பங்களைச் சீர் செய்து அந்த நிலையம் தொடர்ந்து பயணிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், ஆளுநரின் கருத்தை ஆமோதித்ததுடன், […]
