வட மாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்கள் – வடமாகாண ஆளுநர் நடவடிக்கை
நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்களை தற்காலிகமாக வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோவுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கௌரவ ஆளுநர் அவர்கள் பொலிசாரின் தேவைக்கு தற்காலிகமாக வாகனங்களை வழங்கும் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். இதன்படி வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்ட செயலகங்களிலும் இரண்டு வாகனங்கள் அவசர நிலைமையில் […]