இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் தாக்க மதிப்பீடு, அடுத்த ஆண்டு நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும் – ஆளுநர்
2026ஆம் ஆண்டுக்குரிய திட்டங்களைத் தயாரிக்கும்போது மக்களுடன் கலந்துரையாடி அதனை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தினார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (25.09.2025) நடைபெற்றது. இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் தாக்க மதிப்பீடு அடுத்த ஆண்டு நிச்சயம் மேற்கொள்ளப்பட […]
