ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மக்களை நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடினார்
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மாவட்டத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் நேரடி பயணமொன்றை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய அவர், சேதமடைந்த பகுதிகளையும் நேரடியாகப் பார்வையிட்டார். மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதால், மாகாண நிர்வாகத்தினர் எவ்வித தாமதமுமின்றி நிவாரண மற்றும் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். ஆளுநர் அவர்கள், மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கூராய், […]
