ஆலங்குளம் பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடல்
ஆலங்குளம் பிரதேச மக்கள் , கிளிநொச்சி பாதுகாப்பு கட்டளை தலைமையக இராணுவ உயர்அதிகாரி மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 20 செப்ரெம்பர் 2019 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆலங்குளம் பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள 46 உரிமையாளர்களின் காணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் 74 ஏக்கருக்கு சொந்தமான 16 பேர் தமது சொந்த காணிகளே தேவை என்றும் , 44.5 ஏக்கர் காணியின் 30 உரிமையாளர்கள் தமக்கு மாற்றுக்காணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். […]
