விவசாய அமைச்சு

விவசாய-வானிலைஆலோசனைப் பகிர்வுசேவையின் வினைத்திறன் தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடல்

மாகாணவிவசாயத் திணைக்களத்தின் வுவுனியா மாவட்டத்தின் அலுவலர்களிற்கும் “PALM” நிறுவனத்தின் அலுவலர்களுக்குமிடையில் விவசாய-வானிலை ஆலோசனைப் பகிர்வு சேவையின் முன்னேற்றம் தொடர்பாகவும் களநிலை அலுவலர்களிடமிருந்து அதுதொடர்பான பின்னூட்டல்களைப் பெறுவதற்காகவும் 14.08.2020 ஆம் திகதி வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இவ் விவசாய-வானிலைஆலோசனை சேவையானது எதிர்பாக்கப்படும் வானிலை நிலைமைகளுக்கேற்ப விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை திட்டமிட்டுக் கொள்ளவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ் ஆலோசனைத் தகவலானது பேராதனை விவசாயத் திணைக்களத்தின் இயற்கை வளங்கள் முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்படுகின்ற அச்சிடப்பட்ட […]

விவசாய-வானிலைஆலோசனைப் பகிர்வுசேவையின் வினைத்திறன் தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடல் Read More »

வயல் நிலங்களில் மறுவயல் பயிர்ச்செய்கை

மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாதோட்டம் விவசாய போதனாசிரியர் பிரிவில் உயிர்த்தராசன்குளம் கிராமத்தில் சிறுபோகம் 2020 இல் விவசாயத்திணைக்களத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள சௌபாக்கியா விசேட வேலைத்திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டுள்ள மறு வயல் பயிர்ச்செய்கையினை 27.07.2020  அன்று வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் மற்றும் மாகாண விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் நேரடியாக பார்வையிட்டிருந்தனர். இந்த சிறுபோகத்தில் குறித்த பிரதேசத்தில் வயல் நிலங்களில் முதல் தடவையாக அதிகளவான

வயல் நிலங்களில் மறுவயல் பயிர்ச்செய்கை Read More »

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான களவிஜயம்

விவசாய நவீனமயமாக்கல் திட்ட முன்னேற்றம் தொடர்பான களவிஜயமானது மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், விவசாய நவீனமயமாக்கல் திட்ட முகாமைத்துவ அலகின் பிரதி திட்டப்பணிப்பாளர் திரு. தம்மிக்க குணவர்த்தன, விவசாய விஞ்ஞானி திரு. சுனில் கோவின்ன, நிகழ்ச்சித்திட்ட அலுவலர் சந்தன மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரால் 24.07.2020 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் மத்தியவிவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் முத்துஐயன்கட்டு, முத்துவிநாயகபுரம், தண்டுவான், ஒட்டுசுட்டான், தட்டயமலை, பண்டாரவன்னி ஆகிய கிராமங்கள்

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான களவிஜயம் Read More »

விதையுற்பத்திக்கான ‘லங்கா ஜம்போ’ நிலக்கடலை அறுவடை விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் உலகவங்கியின் நிதி அனுசரணையில் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் நிலக்கடலை உற்பத்தியினை ஊக்குவிப்பதுடன் விவசாயிகளின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்காகவும் திருவையாறு மற்றும் கனகாம்பிகைக்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு ½ ஏக்கர் விஸ்தீரணத்துக்கான 20kg ஜம்போ நிலக்கடலை விதையும் 25kg ஜிப்சமும், மின்சார நீர் இறைக்கும் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டு தற்போது நிலக்கடலை விதைகள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. மத்திய விவசாய திணைக்களத்தின் விதை அத்தாட்சிப்படுத்தற் சேவைப் பிரிவினரால் பயிர்ச்செய்கைக் காலப்பகுதிகளில் கண்காணிப்பு

விதையுற்பத்திக்கான ‘லங்கா ஜம்போ’ நிலக்கடலை அறுவடை விழா Read More »

உவர் நிலத்தில் நெற்செய்கை மற்றும் நெல் அறுவடையின் பின்னரான மறுவயற்பயிர்ச்செய்கை மற்றும் மரக்கறிச்செய்கை தொடர்பான களவிஜயம்

ஆளுநர், வடமாகாணம் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக, 24.07.2020 ஆம் திகதி சீனா நாட்டு சர்வதேச புகையிரத கூட்டுறவு நிறுவனத்தின் (Railway International Group CO, Ltd) இலங்கைக்கான பிரதிநிதிகளான எந்திரி வெபர் சியா மற்றும் திரு.ஹாயோ பெங் ஆகியோருடன் யாழ் மாவட்டத்திற்கான பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அ.சிறிரங்கன், உதவி விவசாய பணிப்பாளர் திருமதி.வி.நடனமலர் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர் திரு.ச.பாலகிருஸ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவானது நவாலி தெற்கு, அராலி, வட்டுக்கோட்டை சங்கானை, சங்குவேலி வயல்வெளிகளில் பயிர்செய்கை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக

உவர் நிலத்தில் நெற்செய்கை மற்றும் நெல் அறுவடையின் பின்னரான மறுவயற்பயிர்ச்செய்கை மற்றும் மரக்கறிச்செய்கை தொடர்பான களவிஜயம் Read More »

விவசாய நவீனமயமாக்கல் திட்ட பப்பாசி செய்கைக்கான களவிஜயம்

வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் தலைமையிலான குழுவினர் விவசாய நவீன மயமாக்கல் திட்ட அனுசரணையுடன் வவுனியா சன்னாசிப்பரந்தனில் பப்பாசி செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் தோட்டங்களை 24.07.2020 அன்றுபார்வையிட்டனர். இப்பிரதேசத்தில் பப்பாசிச் செய்கையானது வைரசு நோய்த்தாக்கத்தின் காரணமாக அண்மைக் காலத்தில் கைவிடப்பட்டது. விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் விவசாயிகளிற்கு தலா 320 ரெட்லேடி இன பப்பாசிக் கன்றுகள், 40 நாகபூச்சிடப்பட்ட இரும்பு குழாய்கள்(GI Pipe), 180 m நீளம் 3 m அகலமுடைய பூச்சி உட்புகாவலை

விவசாய நவீனமயமாக்கல் திட்ட பப்பாசி செய்கைக்கான களவிஜயம் Read More »

கொய்யாகாயினை ஐரோப்பிய நாடுகளிற்கு ஏற்றுமதி செய்யும் முல்லைத்தீவு விவசாயி

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் கொய்யா செய்கை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் 2016 ஆம் ஆண்டு கொய்யாச் செய்கைக்காக Bangkok Giant என்ற கொய்யா இனக்கன்றுகள் விவசாயிகளிற்கு செய்கைக்காக வழங்கப்பட்டது. பழம்பாசியினைச் சேர்ந்த சின்னத்தம்பி பிரபாகர் என்ற விவசாயி விவசாய திணைக்களத்தால் வழங்கப்பட்ட நாற்றுக்களுடன் தானும் மேலதிகமாக கொள்வனவு செய்து மொத்தமாக 1500 நாற்றுக்களை நாட்டி பராமரித்து வருகின்றார். மிகச்சிறப்பான முறையில் செய்கையினை மேற்கொண்ட இவ் விவசாயி 2019

கொய்யாகாயினை ஐரோப்பிய நாடுகளிற்கு ஏற்றுமதி செய்யும் முல்லைத்தீவு விவசாயி Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் இடங்களிற்கான களச்சற்றுலா

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ்; நிலக்கடலை விதை உற்பத்தியினை ஊக்குவிப்பதுடன்; விவசாயிகளின் பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்குடன் திருவையாறு மற்றும் கனகாம்பிகைக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் 30 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டனர். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளீடுகளாக ½ ஏக்கர் விஸ்தீரணத்துக்கான 20Kg ஜம்போ நிலக்கடலை விதை, 25Kg ஜிப்ஸம் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் என்பன விநியோகிக்கப்பட்டு பயிர் தற்போது அறுவடை நிலையில் காணப்படுகின்றது. மேற்படி நிலக்கடலைப் பயிர்ச் செய்கை விவசாயிகளுக்கு பயனுடையதாக

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் இடங்களிற்கான களச்சற்றுலா Read More »

விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டம், 2020 கீழ் கொடித்தோடைக் கன்றுகள் விநியோகம்

மாகாண விவசாயத் திணைக்களத்தால் உலகவங்கியின் நிதி அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் அக்கராயன் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கொடித் தோடைச் செய்கைக்கான 100 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு உள்ளீடுகள் விநியோக நிகழ்வு 12.05.2020 அன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் மாகாண பிரதி திட்ட பணிப்பாளர் திரு.க.பத்மநாதன் அவர்கள் தனது

விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டம், 2020 கீழ் கொடித்தோடைக் கன்றுகள் விநியோகம் Read More »

நிலக்கடலை விநியோகமும் சமூக மட்ட அமைப்புக்களின் உருவாக்கமும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் (CSIAP) கீழ் 70 ஏக்கர் விஸ்தீரணத்திற்கான நிலக்கடலை விநியோக நிகழ்வு 14.05.2020 ஆம் திகதி ஒட்டிசுட்டான் இளைஞர் விவசாயக் கழகத்தில் தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு.சி.சுரேன் அவர்களின் தலைமையில் மு.ப.11.00மணிக்கு இடம்பெற்றது. யாலா 2020 காலத்திற்க்கு 80 பயனாளிகளிடையே 70 ஏக்கருக்கு 2800 கிலோ நிலக்கடலை விதைகள் விநியோகிக்கப்பட்டன. இந் நிகழ்வின் போது 5 கிராஅலுவலர் பிரிவுகளில்

நிலக்கடலை விநியோகமும் சமூக மட்ட அமைப்புக்களின் உருவாக்கமும் Read More »