விவசாய அமைச்சு

வயல் அறுவடை விழாவும் விவசாயிகள் சந்திப்பும்

மன்னார் மாவட்டம் இரணை இலுப்பைக் குளம் மற்றும் காக்கையன் குள விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளின் விவசாயிகளுடனான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அப்துல் சுகூறு தலைமையில் இரணை இலுப்பைக்குளம் கமநல கேந்திர நிலையத்தில் 17.11.2020 ஆம் திகதி நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளார் திரு.சி.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் பிரிவிற்குரிய விவசாயப் போதனாசிரியர்கள் மூலம் […]

வயல் அறுவடை விழாவும் விவசாயிகள் சந்திப்பும் Read More »

புரவி புயலின் தாக்கம் தொடர்பான களஆய்வு

கடந்த 02.12.2020 மற்றும் 03.12.2020 ஆம் திகதிகளில் வடமாகாணத்தின் ஊடாக கடந்த புரவிப் புயலின் தாக்கம் காரமணாக கிடைத்த கனமழை, விவசாய மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புக்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் தொடர்பாக பார்வையிடுவதற்கான கள விஜயத்தினை வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் அவர்கள் மேற்கொண்டிருந்தார். மேற்படி களவிஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளம், கிளிநொச்சிக்குளம், கனகாம்பிகைக்குளம் மற்றும் அக்கராயன் குளம் ஆகியவற்றை பார்வையிட்டு குறித்த குளங்களுக்குரிய பொறியியலாளர்களான எந்திரி.எஸ்.பரணீதரன், எந்திரி.எஸ்.செந்தில்குமரன், எந்திரி.ரிசியந்தன் ஆகியோருடன் கள நிலவரங்கள் தொடர்பாக

புரவி புயலின் தாக்கம் தொடர்பான களஆய்வு Read More »

மின்தறி உற்பத்தி நிலையத் திறப்பு விழா

தொழிற்துறைத் திணைக்களத்தினால் தும்பளை தெற்கு, பருத்தித்துறை எனும் முகவரியில் புதிதாக அமைக்கப்பட்ட மின்தறி உற்பத்தி நிலைய கட்டிடமானது வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு ஆள்வார்பிள்ளை சிறி அவர்களாலும் இன்று 29.10.2020 மதியம் 12.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர்; திருமதி வனஜா செல்வரட்ணம் மற்றும் கணக்காளர் திரு ப.காண்டீபன் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் உதவிச்

மின்தறி உற்பத்தி நிலையத் திறப்பு விழா Read More »

துளிநீர்ப்பாசனத்தின் கீழ் முருங்கைச் செய்கையினை ஊக்குவிப்பதற்கான வயல்விழா

யாழ் மாவட்டத்திலுள்ள தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில், தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் தலைமையில் துளி நீர்ப்பாசனத்தின் கீழ் முருங்கைச் செய்கையினை ஊக்குவிப்பதற்கான வயல் விழாவானது விவசாயி திரு. புஸ்ப்பராஜன் அவர்களின் தோட்டத்தில் அதிக எண்ணிக்கையான விவசாயிகளின் வருகையோடு 16.10.2020 ஆம் திகதி ஆரம்பமாகியது. மேற்படி வயல் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்களும் யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். யாழ் மாவட்ட பிரதி

துளிநீர்ப்பாசனத்தின் கீழ் முருங்கைச் செய்கையினை ஊக்குவிப்பதற்கான வயல்விழா Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நவீன தொழில்நுட்பங்களின் சேர்க்கையாக விளங்கிய விவசாயக் கண்காட்சி

மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி, கிளிநொச்சியில் 01.10.2020 மற்றும் 02.10.2020 ஆம் திகதிகளில்“தற்சார்பு விவசாய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி” என்னும் தொனிப் பொருளிலான விவசாயக் கண்காட்சி – 2020 ஆனது காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இக் கண்காட்சியின் முதலாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடித்துறை அமைச்சர் கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் கௌரவ

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நவீன தொழில்நுட்பங்களின் சேர்க்கையாக விளங்கிய விவசாயக் கண்காட்சி Read More »

விவசாயக் கண்காட்சி – 2020

மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி, கிளிநொச்சியில் 01.10.2020 மற்றும் 02.10.2020 ஆம் திகதிகளில் “தற்சார்பு விவசாய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி” என்னும் தொனிப்பொருளிலான விவசாயக்கண்காட்சி – 2020 காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியின் முதலாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் அபிவிருத்தி மற்றும் நீரியல்துறை அமைச்சர் கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் கௌரவ. திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களும்

விவசாயக் கண்காட்சி – 2020 Read More »

“சுபீட்சமானநோக்கில் விவசாய மறுமலர்ச்சி”எனும் தொனிப் பொருளில் கமத்தொழில் அமைச்சர் அவர்களின் யாழ் மற்றும் கிளிநொச்சிக்கான விஜயம்

“சுபீட்சமான நோக்கில் விவசாய மறுமலர்ச்சி” எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் விவசாய உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் 15.09.2020 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடல் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டைசார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ டி.பி.ஹேரத்,

“சுபீட்சமானநோக்கில் விவசாய மறுமலர்ச்சி”எனும் தொனிப் பொருளில் கமத்தொழில் அமைச்சர் அவர்களின் யாழ் மற்றும் கிளிநொச்சிக்கான விஜயம் Read More »

கௌபி அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வு

சிறு அளவிலான விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித் திட்டத்தின் (SAPP) கீழ் வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டத்தின் கீழ் கௌபீ பயிரின் அறுவடை விழா நிகழ்வானது கிளாலி விவசாயப் போதனாசிரியர் திருமதி.துர்க்காயினி திருக்குமரன் அவர்களின் தலைமையில் இந்திராபுரம் கிராமத்தில் கிறிஸ்தோபு ரகு எனும் பயனாளியின். தோட்டத்தில் 28.08.2020 ஆம் திகதி காலை 10:00 மணியளவில் இடம் பெற்றது. கௌபீ பயிர்ச் செய்கையினை மாவட்ட மட்டத்தில் மேம்படுத்தி விரிவாக்கும் நோக்குடன் இச் செயற்றிட்டத்தினூடாக 1600 Kg வருணி

கௌபி அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »

முழங்காவிலில் சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் மாம்பழ மற்றும் வாழைப்பழ அறுவடை வயல்விழா நிகழ்வு

முழங்காவிலில் சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் மாம்பழ மற்றும் வாழைப்பழ அறுவடை வயல்விழா நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவில், சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் மாமரச் செய்கை மற்றும் வாழைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்ற திரு.அருணாசலம் பொன்னுத்துரை எனும் விவசாயியின் தோட்டத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முழங்காவில் பகுதி விவசாயப் போதனாசிரியர் தலைமையில் 21.08.2020 ஆம் திகதி காலை 10

முழங்காவிலில் சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் மாம்பழ மற்றும் வாழைப்பழ அறுவடை வயல்விழா நிகழ்வு Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் குரக்கன் அறுவடை விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் குரக்கன் பயிர்ச்செய்கையின் அறுவடை விழாவானது கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் அம்பாள்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவிலுள்ள செல்வாநகர் கிராமத்தில் ம.இராஜகோபால் எனும் பயனாளியின் தோட்டத்தில் 19.08.2020 ஆந் திகதி நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற இவ் அறுவடை வயல் விழாவிற்கு பிரதம அதிதியாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி.எஸ்.J.அரசகேசரி

கிளிநொச்சி மாவட்டத்தில் குரக்கன் அறுவடை விழா Read More »