மகளிர் விவகார அமைச்சு

மகளிர் விவகார அமைச்சினால் மெழுகுவர்த்தி உற்பத்திற்கான வாழ்வாதார உதவி

மெழுகுதிரி உற்பத்தியில் 04 பேர் கொண்ட குழுவாக ஈடுபடும் பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு 2018ம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதியூட்டத்தினூடாக உற்பத்தியினை விஸ்தரிப்பதற்கான உற்பத்தி உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் கொட்டகை அமைப்பதற்கான நிதி ஆகிய உதவிகள் வடமாகாணம், மகளிர் விவகார அமைச்சினூடாக அண்மையில் வழங்கப்பட்டது. அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்களினால் வேலணை கிழக்கு, 1ம் வட்டாரத்தில் சாட்டி கிராமத்தில் அமைந்துள்ள ‘யோசப் மெழுகுதிரிகள்’ உற்பத்தி செய்யும் குறித்த மகளிர் […]

மகளிர் விவகார அமைச்சினால் மெழுகுவர்த்தி உற்பத்திற்கான வாழ்வாதார உதவி Read More »

2019 ஆம் ஆண்டின் அரச முதியோர் இல்லத்தின் நிகழ்வுகள்.

புத்தாண்டு தினத்தன்று ஆரோக்கிய விநாயகர் சமேத நிற்சிங்க வைரவர் ஆலயத்தில் விசேட பூசைகளும் தேசியக் கொடியேற்றலுடனான சத்தியப்பிரமாண நிகழ்வுகளும் மூத்தோர்கள், உத்தியோகத்தர்களால் இணைந்து செயற்படுத்தப்பட்டது. இத் தினத்தில் உள மேம்பாட்டிற்காகவும், மகிழ்வான எதிர்காலத்தை நோக்கியதான விழிப்புணர்விற்காகவும் நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டன. தைப்பொங்கல் தினத்தன்று விசேட ஆராதனைகளும் தியான நிகழ்வுகளும் இல்லச் சூழலில் ஒழுங்குபடுத்தப்பட்டு, வடிவமைக்கப்பட்டு சமூக நிறுவனங்களின் ஒன்றிணைவுடனும் தமிழ்ப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மூத்தோர்களின் பங்குபற்றுதலுடனான பொங்கல் நிழ்வும் செய்யப்பட்டது.

2019 ஆம் ஆண்டின் அரச முதியோர் இல்லத்தின் நிகழ்வுகள். Read More »

வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம் லோட்டஸ் தொழில் முயற்சியாளர்கள் குழுவிற்கு வழங்கப்பட்டது

சமூக மட்ட அமைப்புக்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்தில் வாழைநார் சார் உற்பத்தியில் ஈடுபடும் கன்னட்டி வெங்கலச்செட்டிக்குளத்தினைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழுக்களாக ஈடுபடும் லோட்டஸ் தொழில் முயற்சியாயர்ளுக்கு 2018ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட மூலதன நிதியினூடாக (PSDG)ரூபா 445,000.00 பெறுமதியான வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம் எமது அமைச்சினூடாக வழங்கப்பட்டது.

வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம் லோட்டஸ் தொழில் முயற்சியாளர்கள் குழுவிற்கு வழங்கப்பட்டது Read More »

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் – யாழ்ப்பாணம்

பெண் தலைமைத்துவக்  குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் விநியோக  நிகழ்வானது 2018.12.12 ஆம் திகதி  அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் மகளிர் விவகார அமைச்சு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, நல்லூர் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த  ஐந்து பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சமையல் உபகரணங்கள் மின்சார நீர் இறைக்கும் மின் மோட்டர், தையல் இயந்திரங்கள்  மற்றும்

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் – யாழ்ப்பாணம் Read More »

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் – வெண்கலச்செட்டிகுளம்

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் விநியோக  நிகழ்வானது 2018.12.14 ஆம் திகதி  அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் ஏஞ்சல் மெழுகுதிரி உற்பத்தியாளர் குழு மண்டபம், கன்னாட்டி, வெண்கலச்செட்டிகுளத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வெண்கலச்செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவினைச் சேர்ந்த நான்கு பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மெழுகுதிரி உற்பத்திக்கான ரூபா 99,450.00 பெறுமதியான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொண்டனர்.

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் – வெண்கலச்செட்டிகுளம் Read More »