பிரதம செயலாளர் அலுவலகம்

சிங்கள தமிழ் புத்தாண்டை அனுஸ்டிக்கும் முகமாக பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் ஒரு புதிய பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் முகமாக சிங்களம் / தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டது. இதற்கிணங்க, கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் வளாகத்தில் பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி மற்றும் அலுவலர்களின் பங்களிப்புடன் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. இந் நிகழ்வானது சுப முகூர்த்த வேளையான 15.04.2019 ஆம் திகதி காலை 11.17 மணியளவில் நடைபெற்றது.

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணிகளுக்கான உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது

வடக்கு மாகாண தொழினுட்ப உத்தியோகத்தர் சேவையின் பயிற்சித்தரம் (ஒரு வருடம்) இதற்கான 04 வெற்றிடங்கள், அலுவலக பணியாளர் சேவையின் தரம் III இற்கான 91 வெற்றிடங்கள், உள்@ராட்சி அமைச்சின் திணைக்கள சேவையின் குடியேற்ற உத்தியோகத்தர் பதவியணிக்கான 11 வெற்றிடங்கள் ஆகிய வற்றிற்கான தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு நியமனக் கடிதம் வழங்கல் நிகழ்வு 2019.04.08 ஆம் திகதி யாழ்.மாநகரசபையின் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் …

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணிகளுக்கான உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது Read More »

யாழ்.மாவட்டத்தில் ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை

வடமாகாண ஆளுநர். கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் ஆலோசனையின் கீழ் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலில் Stromme Foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணியும் பயிற்சியும் அலுவலகத்தினால் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற நிறை வேற்றுத்தர அதிகாரிகளுக்கு “ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல்” தொடர்பான பயிற்சிப் பட்டறையானது வடக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்டு வருகின்றது. இப்பயிற்சிப் பட்டறையானது வடமாகாணத்திலுள்ள மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களில் நடாத்தி முடிக்கப்பட்டு …

யாழ்.மாவட்டத்தில் ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை Read More »

போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான ”சித்திரை புதுவருட உறுதியுரை” நிகழ்வு நடைபெற்றது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைவாக, போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான ”சித்திரை புதுவருட உறுதியுரை” நிகழ்வு 3 ஏப்பிரல் 2019 ஆம் திகதி, கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. பிரதி பிரதம செயலாளர்கள் – நிதி மற்றும் நிர்வாகம், பிரதம செயலாளர் செயலகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றின் அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சி நிரலிற்கு அமைவாக தேசிய கொடி மற்றும் மாகாணக் கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை …

போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான ”சித்திரை புதுவருட உறுதியுரை” நிகழ்வு நடைபெற்றது Read More »

உலக ஓட்டிசம் தினத்தின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது

உலக ஓட்டிசம் தினத்தை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வானது 02 ஏப்ரல் 2019 ஆம் திகதி அன்று கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாதவம் ஓட்டிஸம் நிலையத்திலிருந்து தங்கள் பெற்றோருடன் வருகைதந்த சிறுவர் குழாமினர் இந் நிகழ்வில் பங்கேற்றனர். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அலுவலர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதம செயலாளர் கொத்தணியின்கீழ் வரும் திணைக்களங்களின் அலுவலர்கள் ஆகியோர் …

உலக ஓட்டிசம் தினத்தின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது Read More »

ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பானபயிற்சிப்பட்டறை

வடமாகாண ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் அ.பத்திநாதன்அவர்களின்அவர்களின் வழிகாட்டலில் Stromme Foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் பிரதிப் பிரதம செயலாளர் ஆளணியும் பயிற்சியும் அலுவலகத்தினால் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற நிறைவேற்றுத்தர அதிகாரிகளுக்கு நடாத்தப்பட்ட “ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல்” தொடர்பான பயிற்சிப்பட்டறையானது மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக 29.03.2019 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் 30.03.2019 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும் நடாத்தப்பட்டது. கிளிநொச்சி …

ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பானபயிற்சிப்பட்டறை Read More »

ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை

வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் பிரதம செயலாளர் அவர்களின் வழிகாட்டலில் Stromme Foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் பிரதிப் பிரதம செயலாளர் ஆளணியும் பயிற்சியும் அலுவலகத்தினால் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற நிறைவேற்றுத்தர அதிகாரிகளுக்கு நடாத்தப்பட்ட “ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல்” தொடர்பான பயிற்சிப்பட்டறை. 15.03.2019 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலத்திலும் 16.03.2019 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலத்திலும் நடாத்தப்பட்டது.

71 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது

வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் 71 வது சுதந்திர தின கொண்டாட்டம் 2019 பெப்ரவரி 04 ஆம் திகதியன்று பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் இடம்பெற்றது. தேசிய கொடியை பிரதி பிரதம செயலாளர் – நிர்வாகம், வ.மா திருமதி எஸ்.மோகநாதன் ஏற்றிவைத்தார் மற்றும் வடக்கு மாகாணக் கொடி பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, வ.மா திரு.பத்மநாதன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. பிரதம செயலாளர் கொத்தணி அலுவலகம் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சின் அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து …

71 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது Read More »