இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாடப்பட்டது
“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி 04) கைதடியில் உள்ள பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் வைபவ ரீதியாக கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை பிரதிப் பிரதம செயலாளர்-நிர்வாகம் திருமதி. எ. அன்ரன் யோகநாயகம் ஏற்றி வைத்தார், வடக்கு மாகாணக் கொடியை உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.பிரணவநாதன் ஏற்றி வைத்தார். நன்றியுரையை உதவிப் பிரதம செயலாளர் திருமதி எம்.டென்ஷியா வழங்கியிருந்தார். பிரதம செயலாளரின் […]