கல்வி அமைச்சு

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான ஒளி விழா

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2019 ஆம் ஆண்டிற்கான ஒளி விழாவானது திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் தலைமையில் 30 டிசெம்பர் 2019 அன்று மாலை மூன்ற மணிக்கு யாழ் சென் பெனடிக்ற் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயத்தில் நடைபெற்றது. பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் அருட்தந்தை ஜெறோம் செல்வநாயகம் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகவும் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திர.ஜோன் குயின்ரஸ் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள். கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளைப்பருவ உதவிப் …

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான ஒளி விழா Read More »

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித் திட்டம் – 26 ஆகஸ்ட் 2019

யாழ் மாவட்டத்தின் நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித் திட்டத்தின் ஏழாவது கட்டத்தின் கீழ் கல்வித்துறையின் நடமாடும் சேவை எதிர்வரும் 26.08.2019 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை செம்மணி வீதி நல்லூரில் அமைந்துள்ள மாகாணக் கல்வி அமைச்சில் நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. உயர்தரப்பரீட்சை – 2019

2019 ம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 04 ஆகஸ்ட் 2019 அன்று நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு 17402 மாணவர்கள் 211 பரீட்சை நிலையங்களில் தோற்றவுள்ளார்கள். 2019 ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சை 05 ஆகஸ்ட் 2019 தொடக்கம்31 ஆகஸ்ட் 2019 வரை நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு 15213 பாடசாலை மாணவர்களும் 3857 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் 217 பரீட்சை நிலையங்களில் தோற்றவுள்ளார்கள்.

13வது மாகாண மட்ட ஆண், பெண்களுக்கான கரம் போட்டி

13வது மாகாண மட்ட மட்ட ஆண், பெண்களுக்கான கரம் போட்டி யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்லூரி 06 ,07 ஏப்பிரல் 2019 திகதிகளில் இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள் முதலாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம் இரண்டாமிடம் – மன்னார் மாவட்டம் மூன்றாமிடம் – வவுனியா மாவட்டம் பெண்கள் முதலாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம் இரண்டாமிடம் – மன்னார் மாவட்டம் மூன்றாமிடம் – முல்லைத்தீவு மாவட்டம்

13வது மாகாண மட்ட ஆண், பெண்களுக்கான சதுரங்க போட்டி

13வது மாகாண மட்ட மட்ட ஆண், பெண்களுக்கான சதுரங்க போட்டி யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்லூரி 06 .07 ஏப்பிரல் 2019 திகதிகளில் இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள் முதலாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம் இரண்டாமிடம் – கிளிநொச்சிமாவட்டம் பெண்கள் முதலாமிடம் – கிளிநொச்சிமாவட்டம் இரண்டாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம்

13வது மாகாண மட்ட ஹெக்கி போட்டி

13வது மாகாண மட்ட மட்ட ஆண், பெண்களுக்கான ஹெக்கி போட்டி யாழ்ப்பாண கல்லூரி விளையாட்டரங்கில் 06.07 ஏப்பிரல் 2019 திகதிகளில் இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள் முதலாமிடம் – மன்னார் மாவட்டம் இரண்டாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம் மூன்றாமிடம் – வவுனியா மாவட்டம் பெண்கள் முதலாமிடம் – யாழ்ப்பாண மாவட்டம் இரண்டாமிடம் – மன்னார் மாவட்டம்

13வது மாகாண மட்ட டேக்வாண்டோ போட்டி

13வது மாகாண மட்ட மட்ட ஆண், பெண்களுக்கான டேக்வாண்டோ போட்டி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 23, 24 March 2019 அன்று இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

13வது மாகாண மட்ட பூப்பந்தாட்ட போட்டி

13வது மாகாண மட்ட மட்ட ஆண், பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி மன்னார் உள்ளக விளையாட்டரங்கில் 01,02 மார்ச் 2019 அன்று இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13வது மாகாண மட்ட மேசைப்பந்துப் போட்டி

13வது மாகாண மட்ட  ஆண், பெண்களுக்கான மேசைப்பந்துப் போட்டி மன்னார் உள்ளக விளையாட்டரங்கில் 01,02 மார்ச் 2019 திகதிகளில் இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.