வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் கலை மற்றும் இலக்கியத் துறைக்கு பங்களிப்பு செய்து தற்போது வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு உதவுத் தொகை வழங்கல் நிகழ்வு
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் உள்ள கலைஞர்களுக்கு உதவுதொகை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் 06 ஒக்டோபர் 2020 அன்று கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்கள் சிறப்பு […]
