ஆளுநர்

மாகாண மட்டஆங்கில தின போட்டியில் வெற்றி பெற்ற தென்மராட்சி கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான கௌரவிப்பு

வடக்கு மாகாண மட்ட ஆங்கில தின போட்டியில் வெற்றி பெற்ற தென்மராட்சி கல்வி வலய பாடசாலை  மாணவர்களுக்கான கௌரவிப்பு இன்று (24.10.2024)  தென்மராட்சி கல்வி வலயத்தில்  நடைபெற்றது.  இந் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டார். தென்மராட்சி கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் திரு.கிறிஸ்தோபர் கமலராஜன் தலைமையில் இடம்பெற்ற  இந் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தென்மராட்சி கல்வி வலயத்தின் கல்வி சார்ந்த அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் என பெருந்திரளானோர் […]

மாகாண மட்டஆங்கில தின போட்டியில் வெற்றி பெற்ற தென்மராட்சி கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான கௌரவிப்பு Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது

 வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று (23/10/2024) வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இச் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. அமெரிக்க தூதுவர் காணி விடுவிப்பு தொடர்பாக விபரங்களை  கௌரவ ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது Read More »

வடக்கு மாகாண காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன்  அவர்கள் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்று (08.10.2024) காலை  காணிப் பிரச்சனைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர்,  ஆளுநரின் செயலாளர், மாகாண காணி ஆணையாளர் மற்றும்  மாகாணத்தில் உள்ள சகல மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். காணி இல்லாத பொது மக்களுக்கு காணிகளை வழங்குவதை விடுத்து வசதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. கௌரவ ஆளுநர் தெரிவிக்கையில், ஏழை

வடக்கு மாகாண காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வு Read More »

வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள், சட்டவிரோத மண் அகழ்வு, வீதி விபத்துக்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (08.10.2024) காலை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன்  அவர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து  மாவட்ட அரசாங்க அதிபர்களும், பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாண இராணுவ, கடற்படை பொறுப்பதிகாரிகள், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள்

வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள், சட்டவிரோத மண் அகழ்வு, வீதி விபத்துக்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. Read More »

வடமாகாணத்தில் உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது

வட மாகாண நன்னடத்தை பாதுகாவல் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தால் ‘’பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்’’ எனும் கருப்பொருளில் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் மண்டபத்தில் 05.10.2024 திகதி காலை இடம் பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.இ. இளங்கோவன் பிரதம செயலாளர் வடக்கு மாகாணம், திரு.ஜே. எஸ். அருள்ராஜ் செயலாளர் சுகாதார அமைச்சு வட மாகாணம், ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். வட மாகாண

வடமாகாணத்தில் உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது Read More »

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதிகளில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது

இன்று (04.10.2024) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும், , வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன்,யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெ.அருள்ராஜ் ,வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ..கேதீஸ்வரன், பிரதேச செயலாளர், இராணுவம், கடற்படை, போலீஸ் போன்றவற்றின் உயர் அதிகாரிகளும் சுகாதார உத்தியோகஸ்தர்கள் யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் ஆகியோர்

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதிகளில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது Read More »

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தலைமையில் 03.10.2024 காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது தனியார் போக்குவரத்து சபையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு தனியார் பேரூந்து நிலையம், பஸ் தரிப்பிடங்களில் காணப்படும் வசதி வாய்ப்புகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் அரச போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பொதுமக்கள் தினமாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது

இன்றிலிருந்து (03.10.2024) கௌரவ ஆளுநர் அவர்களுடன் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை நேரடியாக அலுவலக நேரங்களில் கலந்துரையாடுவதற்காக ஏற்கனவே பொது மக்கள் தினமாக இருந்த புதன்கிழமைக்கு பதிலாக திங்கட்கிழமையினை பொதுமக்கள் தினமாக மாற்றப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்படுகின்றது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பொதுமக்கள் தினமாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது Read More »

2024 ஆம் ஆண்டுக்கான விவசாயக் கண்காட்சி யாழில்ஆரம்பம்

“காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு சூழல் நேயமான நிலைபேறான விவசாய யுகம் நோக்கி” என்ற தொனிப் பொருளில் வடக்கு மாகாண விவசாய கண்காட்சி திருநெல்வேலியில்  அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நேற்று (02.10.2024) ஆரம்பமாகியது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் நாடா வெட்டி  ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணப் பிரதம  செயலாளர்  திரு. இ.இளங்கோவன் அவர்களும், கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண விவசாய 

2024 ஆம் ஆண்டுக்கான விவசாயக் கண்காட்சி யாழில்ஆரம்பம் Read More »

யாழ் கலாசார மத்திய நிலையத்தில் மர நடுகை இடம்பெற்றது.

02.10.2024ந் திகதி மகாத்மா காந்தியின் 155வது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் கலாசார மத்திய  நிலையத்தில் மர நடுகை இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும் இந்திய துணைத்தூதர் ஶ்ரீமான் சாய் முரளி அவர்களும், யாழ் மாநகர சபை  ஆணையாளர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்துசிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து  கலந்துரையாடல் இடம்பெற்றது. இறுதியில் கௌரவ ஆளுநர் அவர்கள் கலாசார மத்திய நிலையத்தை முழுமையாக

யாழ் கலாசார மத்திய நிலையத்தில் மர நடுகை இடம்பெற்றது. Read More »