காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பான கலந்துரையாடல்
காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பாக காணப்படுகின்ற முறைப்பாடுகள் மற்றும் திருப்தியின்மை தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதமசெயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், துறைமுக அதிகாரசபையின் பிரதிப்பிரதம செயற்திட்ட முகாமையாளர், காங்கேசன்துறைத் துறைமுக பொறுப்பு அதிகாரி, உதவி பாதுகாப்பு உத்தியோகத்தர், வட மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர், வட மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், அதிகாரிகள் […]
