வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (26.06.2025) நடைபெற்றது. சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்குரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத போதிலும் தற்காலிக பின்னரங்க வேலியை அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநருக்கு […]
