ஆளுநர்

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவிற்கு கடன் வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல்

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவிற்கு கடன் வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதாநாயகன் அவர்களுக்கும், வங்கிகளுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மதியம் (10.01.2025) இடம்பெற்றது. நெல் கொள்வனவு செய்வதற்கு போதிய களஞ்சிய வசதிகள் இருந்தபோதும் அதற்குரிய கடன் வசதிகளை வங்கிகள் வழங்கவில்லை என அரிசி ஆலை உரிமையாளர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட ஆளுநர், எங்களுடைய மாகாணத்தில் விளையும் நெல் வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அதிகரித்த விலையில் மீண்டும் […]

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவிற்கு கடன் வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் Read More »

வரியிறுப்பாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகள் அமையவேண்டும் -வடக்கு மாகாண ஆளுநர்

வரியிறுப்பாளர்கள் உள்ளூராட்சிமன்றங்களில் நம்பிக்கை வைக்கும்போதுதான் அவர்கள் தாமாகவே முன்வந்து வரியைச்செலுத்துவார்கள். வரியிறுப்பாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகள் அமையவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். முதன் முதலாக உள்ளூராட்சிமன்றம் ஒன்று சுயமாக ஆதன மதிப்பீட்டை நிறைவேற்றி ஆதனவரி அறவிடும் நிகழ்வு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை – கரவெட்டியின், வட்டாரம் -1 கம்பர்மலையில் 10.01.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. கரவெட்டி பிரதேச சபையின் செயலர் க.கம்சநாதன் தனது

வரியிறுப்பாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகள் அமையவேண்டும் -வடக்கு மாகாண ஆளுநர் Read More »

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை வாழ்வாதார மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும். அதைவிடுத்து அதனை நிரந்தர வைப்பிலிட்டு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக்கூடாது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை மரக்கறி பொதுச் சந்தை 10.01.2025 அன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் ரூபா செலவில் இந்தச் சந்தை

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை வாழ்வாதார மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை (09.01.2025) இடம்பெற்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலர் திருமதி சாரதாஞ்சலி மனோகரன் கலந்துகொண்டு, ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கியதுடன், அரசாங்க அலுவலர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதன் பின்னர் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டம் கௌரவ ஜனாதிபதியால் தொடக்கி வைக்கப்பட்டது என்பதையும்

அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். Read More »

கைதடி அரச சிறுவர் பொறுப்பேற்க்கும் இல்லத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பார்வையிட்டார்.

வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கும், கைதடி அரச சிறுவர் பொறுப்பேற்க்கும் இல்லத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை (09.01.2025) பார்வையிட்டார். வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ், இல்லத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.

கைதடி அரச சிறுவர் பொறுப்பேற்க்கும் இல்லத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பார்வையிட்டார். Read More »

ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன- ஆளுநர்

ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேதனை வெளியிட்டார். அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை காலை (07.01.2025) இடம்பெற்றது. மல்லாகத்திலிருந்து அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்த்திப் பவனி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலை வந்தடைந்தது. ஆலய வழிபாட்டைத் தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றன. பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், 1993ஆம்

ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன- ஆளுநர் Read More »

அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும் – வட மாகாண ஆளுநர்

அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும். அரசாங்கப் பணியாளர்களை அதற்குத் தயார்படுத்தும் வகையில் ஐரெக் (ITEC) திட்டத்தின் ஊடான பயிற்சிகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். வடக்கு மாகாண அரசசேவை பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கையின்பேரில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்துக்கு – ஐரெக் (ITEC) – விண்ணப்பிக்கும் முறைமை தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை

அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும் – வட மாகாண ஆளுநர் Read More »

‘யாழ்ப்பாணம் – சுகாதார நகர திட்டத்தின்’ முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வுஆளுநர் இடம்பெற்றது.

‘யாழ்ப்பாணம் – சுகாதார நகர திட்டத்தின்’ முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் திங்கட்கிழமை காலை (06.01.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. உலக சுகாதார நிறுவனத்தால் அடையாளப்படுத்தப்பட்ட விடயப் பரப்புக்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்களின் பாவனையை மட்டுப்படுத்துவதன் தேவைப்பாடு ஆராயப்பட்டதுடன் யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள சில வீதிகளை ஒருவழிப்பாதையாக்குவதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஊடாக

‘யாழ்ப்பாணம் – சுகாதார நகர திட்டத்தின்’ முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வுஆளுநர் இடம்பெற்றது. Read More »

காணியற்றவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களிலும் அரச காணிகள் இருக்கதக்கதாக காணிகள் அற்றவர்கள் பட்டியல் இருக்கின்றமை வேதனையானது. அதனைத் தீர்ப்பதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். பிரமாண அடிப்படையிலான கொடையின் கீழ் 85 மில்லியன் ரூபா செலவில், வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் கிளிநொச்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வடக்கு மாகாண ஆளுநரால் வெள்ளிக்கிழமை (03.01.2025) திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் கடந்த

காணியற்றவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு சனிக்கிழமை காலை (04.01.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் அவர்களும் பங்கேற்றிருந்தார். ஆளுநர் மற்றும் துணைத்தூதுவர் இருவரும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். இந்திய அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு வடக்கு மக்கள் சார்பில் ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு Read More »