இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்
வடக்கு மாகாண இடமாற்றக் கொள்கையை வினைத்திறனாக மாற்றியமைப்பதற்கும், ஆசிரிய இடமாற்றங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (13.07.2025) ஆளுநர் செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசிரியர் இடமாற்றச் சபையில் பதிவு செய்யப்பட்ட இயங்குநிலையிலுள்ள தொழிற்சங்கங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கவேண்டும் எனவும், அனுமதியற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இடமாற்றச் சபையில் […]
