வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆகப் பணியாற்றி ஓய்வுபெறும் எஸ்.குகதாஸ் அவர்களின் பிரிவுபசார விழா
வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆகப் பணியாற்றி ஓய்வுபெறும் எஸ்.குகதாஸ் அவர்களின் பிரிவுபசார விழா வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை (22.07.2025) இடம்பெற்றது. விழாநாயகனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த ஆளுநர் இங்கு உரையாற்றுகையில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராக தான் பணியாற்றிய காலத்தில் குகதாஸ் அவர்கள் அங்கு கடமைபுரிந்ததை நினைவுகூர்ந்தார். எப்போதும் நேர்ச்சிந்தனையுடன் […]
