இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மற்றும் ஜேர்மன் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்
வடக்கு மாகாணத்தின் ஊர்ப் பெயர்களைப் பயன்படுத்தி வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் போலி உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இலங்கைக்கான பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் தூதுவர்களிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தின் தனித்துவமான உள்ளூர் உற்பத்திகளை ஐரோப்பியச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, ஏற்கனவே அங்கு சந்தையை ஆக்கிரமித்துள்ள இத்தகைய போலி உற்பத்திகள் எமது மாகாணத்தின் பொருளாதாரத்துக்குப் பெரும் சவாலாக அமையும் […]
