ஆளுநர்

வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்

யாழ் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பங்குபற்றலுடன் இன்று ஆரம்பமானது. இந்த 62 ஏக்கர் காணிகளை நான்கு வலயங்களாக பிரித்து, அவற்றினை அளந்து அப்பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இன்றும் நாளை மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமையும் இடம்பெறவுள்ளதுடன் , இப்பிரதேசத்திற்குள் தமது காணி உள்ளவர்கள் தெல்லிப்பளை […]

வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம் Read More »

வடமாகாண விவசாய திணைக்கள பிரச்சினை – விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை – ஆளுநர்

கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற வடமாகாண விவசாய திணைக்கள கணக்காய்வு கூட்டத்தின்போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளரை ஆளுநர் பணித்திருந்ததுடன் அந்த அறிக்கை தற்போது ஆளுநருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள கௌரவ ஆளுநர் தீர்மானித்துள்ளார். குறிப்பிட்ட அந்த சம்பவத்தில் சிறுபான்மை இன பெண் அதிகாரியொருவர் தாக்கப்பட்டதனை வன்மையாக கண்டிக்கும் ஆளுநர் அவர்கள் இவ்வாறான சம்பவங்கள் இனி

வடமாகாண விவசாய திணைக்கள பிரச்சினை – விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை – ஆளுநர் Read More »

“வடமாகாண வட்ட மேசை” கலந்துரையாடல்

வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய “வடமாகாண வட்ட மேசை” கலந்துரையாடலின் (“Northern Province Round Table”) முதலாவது கலந்துரையாடல் நாளை (04) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் ஆளுநர் தலைமையில் இடம்பெறவுள்ளது. நாளைய இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் அவர்கள் “வடமாகாணத்தின்

“வடமாகாண வட்ட மேசை” கலந்துரையாடல் Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம் – 03 யூலை 2019

ஆளுநரின் பொதுமக்கள் தினம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தில் 03 யூலை 2019 அன்று புதன்கிழமை  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆளுநரின் பொதுமக்கள் தினம் – 03 யூலை 2019 Read More »

கல்வியமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமையேற்பு

வடமாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளராக எல்.இளங்கோவன் அவர்கள் இன்று (01) தனது கடமைகளை வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்வியமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமையேற்பு Read More »

ஆளுநரின் செயலாளர் இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்

வட மாகாண ஆளுநரின் செயலாளராக எஸ்.சத்தியசீலன் அவர்கள் இன்று (01) காலை ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் செயலாளர் இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார் Read More »

போதைப்பொருளுக்கு எதிரான வடமாகாண பிரதான நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் போதையற்ற தேசமாக நாட்டினை ஆக்கவேண்டுமென்ற தூரநோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்திற்கு வடமாகாணத்தின் பங்களிப்பை வழங்கும் முகமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருளுக்கு எதிரான வடமாகாண பிரதான நிகழ்வு கிளிநொச்சியில்25 யூன் 2019 அன்று நடைபெற்றது. அத்துடன் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் போதைக்கு எதிரான கொடிகளையும் பதாதைகளையும்தாங்கிய வாகனங்களின் பேரணி கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகைதந்தமை

போதைப்பொருளுக்கு எதிரான வடமாகாண பிரதான நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. Read More »

மன்னார் மறைமாவட்ட ஆயர் , ஆளுநர் சந்திப்பு

 ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 25 யூன் 2019 அன்று பிற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு -NP governors Media

மன்னார் மறைமாவட்ட ஆயர் , ஆளுநர் சந்திப்பு Read More »

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஆளுநர் விஜயம்

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 24 யூன் 2019 அன்று நண்பகல் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அங்கு மரத்தடி நிழலில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். தனது சிறுவயது பாடசாலைக் காலத்தில் இவ்வாறு மரத்தடியில் கல்விகற்ற அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட ஆளுநர் அவர்கள், கல்வியூடாக உலகத்தின் எந்தவொரு உயரத்தினையும் எட்டிப்பிடிக்க முடியுமெனவும் கல்வியினை இடைவிடாது தொடர்ந்து சமூகத்தில் சிறந்த ஆளுமைகளாக மாறி பாமர

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஆளுநர் விஜயம் Read More »

அதிபரை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்பு

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேற்குறிப்பிட்ட பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின் பெற்றோர் அதிபருக்கு முறையிட்டும், அதிபர் பொலிசாருக்கு இதுதொடர்பில் அறிவிக்காமல் இந்த சம்பவத்தினை மூடிமறைக்க முயற்சித்தாரென ஆளுநரின் விசேட செயலணியின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததனையடுத்தே குறித்த பாடசாலையின் அதிபரை

அதிபரை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்பு Read More »