யாழ்ப்பாணத்தைஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் கௌரவ ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள்கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் இன்று (14/06/2024) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால், இலங்கையில் இதுவரையில் 17 ஸ்மார்ட் நகரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் நகரையும் ஸ்மார்ட் நகரமாக்கும் திட்ட யோசனை கடந்த 2019 ஆம் […]
