npc2018z

சோளப்பயிர்ச் செய்கையினை முன்னேற்றுதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சோளப்பயிர்ச் செய்கையினை முன்னேற்றுவதற்காக மத்திய அரசின் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ் “மறுவயற் பயிர் சோளத்தின் உற்பத்தியினையும், உற்பத்தித்திறனையும் முன்னேற்றுதல்” நிகழ்ச்சித்திட்டத்தில் வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையினால் பத்து சோளப்பயிர்ச்செய்கை முன்மாதிரித் துண்டங்கள் உடையார்கட்டு, மாணிக்கபுரம், கோம்பாவில், மந்துவில், முத்தையன்கட்டுகுளம், கணேசபுரம், ஒட்டுசுட்டான் மற்றும் அளம்பில் ஆகிய விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஒரு முன்மாதிரித் துண்டத்தின் விஸ்தீரணம் 01 ஏக்கர் எனும் அடிப்படையில் 10 […]

சோளப்பயிர்ச் செய்கையினை முன்னேற்றுதல் Read More »

நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு

PEISEIP திட்டத்தின் கீழ் பாவற்குளம் பகுதியிலிருந்து நிலக்கடலை விதை உற்பத்தித் திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு 22.11.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது.  PEISEIP திட்டமானது வவுனியா மாவட்டத்தில் பாவற்குளம், ஈரற்பெரியகுளம் மற்றும் முகத்தான் குளம் போன்ற பெரிய நீர்ப்பாசனக் குளங்களை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக விவசாய உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் வினைத்திறனான நீர் முகாமைத்துவத்தினூடாக நீர் வளத்தை பாதுகாத்தல்  போன்றன காணப்படுவதுடன் விவசாயத் திணைக்களத்தின்

நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு Read More »

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வடமாகாண ஆளுநர் அவர்களின் வாழ்த்துக்கள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியசரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வடமாகாண மக்களுடன் இணைந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தனக்கான ஒரு இடத்தினை மீள்நிலைநாட்டிக் கொள்வதற்கு புதியதொரு வழிகாட்டலும் தூர நோக்கும் அர்பணிப்பு நிறைந்த கடின உழைப்பும் நமது தாய்நாட்டிற்கு  தற்போது தேவையாகவுள்ளது. இன மத அரசியல் பேதமின்றி இலங்கையின் அனைத்து மக்களையும் தனது வெற்றிப் பயணத்தில் இணைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதற்கு புதிய

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வடமாகாண ஆளுநர் அவர்களின் வாழ்த்துக்கள் Read More »

இந்திய சுற்றுலாத்துறை பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

சென்னைக்கு இரண்டுநாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இந்திய பயண முகவர் சங்கத்தின் அகில இந்திய மற்றும் தமிழ்நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 12 நவம்பர் 2019 அன்று பிற்பகல் சென்னையில் இடம்பெற்றது. 41 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதுடன் ,சென்னைக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பில் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஆர்வத்துடன் செயற்பட்டுவரும் இந்திய பயண முகவர்

இந்திய சுற்றுலாத்துறை பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »

ஆளுநருக்கும் எம்.ஜி.முத்து குழுமத்தின் தலைவருக்குமிடையில் சந்திப்பு

சென்னைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் உலகளாவிய ரீதியில் ஹோட்டல்களை நடத்திவரும் எம்.ஜி.முத்து குழுமத்தின் தலைவரும் நிறைவேற்று பணிப்பாளருமான எம்.ஜி.எம்.ஆனந்த் அவர்களை 11 நவம்பர் 2019 அன்று பிற்பகல் சென்னையில் சந்தித்தார். சுற்றுலாத்துறையில் வெற்றிகரமான ஒரு நிறுவனமாக உலகளாவிய ரீதியில் திகழ்ந்து கொண்டிருக்கும் எம்.ஜி.முத்து குழுமத்தினை வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையில் முதலீடு மேற்கொள்வதற்கு கௌரவ ஆளுநர் இதன்போது அழைப்பு விடுத்தார்.  

ஆளுநருக்கும் எம்.ஜி.முத்து குழுமத்தின் தலைவருக்குமிடையில் சந்திப்பு Read More »

இயக்குனர் பாரதிராஜா – ஆளுநர் சந்திப்பு

பாரதிராஜா சர்வதேச திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு கௌரவ ஆளுநர் விஜயம் செய்து இயக்குனர் பாரதிராஜாவுடன் சுமூக கலந்துரையாடலை மேற்கொண்டார். வடமாகாணத்தில் திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பாரதிராஜா சர்வதேச திரைப்பட பயிற்சிக் கல்லூரியூடாக திரைக்கலை பயிற்சியினை வழங்குமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் இயக்குனர் பாரதிராஜா அவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்தார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

இயக்குனர் பாரதிராஜா – ஆளுநர் சந்திப்பு Read More »

தி.மு.க தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் – ஆளுநர் சந்திப்பு

சென்னைக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 12 நவம்பர் 2019 அன்று முற்பகல் சென்னையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது ஆளுநர் அவர்கள் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும், வடமாகாணத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் தனக்கு இருப்பதாக குறிப்பிட்டார். இதற்கான ஒரு படியாகவே தி.மு.கவின் தலைவரும்

தி.மு.க தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் – ஆளுநர் சந்திப்பு Read More »

நடமாடும் விற்பனை மூலம், மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகளின் விற்பனை தொடர்பான விபரங்கள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் அரச விதை உற்பத்திப் பண்ணை, ஐந்து மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்கள் மற்றும் பூங்கனியியல் கருமூல வள நிலையம் என்பனவற்றில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராகவிருக்கும் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகள் என்பன நடமாடும் சேவை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள், அலுவலகத் தோட்டங்கள் என்பனவற்றினை அமைத்தலையும் அவற்றினை மேம்படுத்துவதற்குத் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் இவ் நடமாடும் விற்பனையானது நடைபெற்று வருகின்றது. மேலும் பசுமையான

நடமாடும் விற்பனை மூலம், மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகளின் விற்பனை தொடர்பான விபரங்கள் Read More »