npc2018z

வடமாகாண துறைசார் செயலாளர்கள் மற்றும் பிரதி பிரதம செயலாளர்களுடனான கலந்துரையாடல்

வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண துறைசார் செயலாளர்கள் மற்றும் பிரதி பிரதம செயலாளர்களுடனான கலந்துரையாடல் 10 யூன் 2021 அன்று காலை 11 மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் நிதி, நிர்வாக, நிறுவன மற்றும் ஆளணி பயற்சி தொடர்பான தற்போதைய துறைசார் செயற்பாடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், கல்வி, சுகாதாரம், விவசாயம், மகளிர் விவகாரம், உள்ளூராட்சித் […]

வடமாகாண துறைசார் செயலாளர்கள் மற்றும் பிரதி பிரதம செயலாளர்களுடனான கலந்துரையாடல் Read More »

வடமாகாண கல்வி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாண கல்வி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (10.6.2021) காலை 9.30 மணிக்கு வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவிச்செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளர், மற்றும் கல்வி, கலை, கலாச்சார மற்றும் விளையாட்டு துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். குறித்த கலந்துரையாடலில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களின் தற்போதைய

வடமாகாண கல்வி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

சுகாதார அமைச்சின் வருடாந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

2021 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு நடைபெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் 09 யூன் 2021 அன்று மதியம் 2.30 மணியளவில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பிரதமசெயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச்செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இக்குறித்த கலந்துரையாடலில் விசேட தேவைகளுடைய குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை

சுகாதார அமைச்சின் வருடாந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

வட மாகாண விவசாய திணைக்களத்தின் நடமாடும் சேவை

வட மாகாண விவசாய திணைக்களத்தின் யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தால் 04.06.2021 ஆம் திகதி தொல்புரம் விவசாய போதனாசிரியர் பிரிவில் விவசாயிகளிற்கான விதை, நடுகைப் பொருட்கள் விவசாய நடமாடும் சேவை முலம் விற்பனை செய்ப்பட்டது. இந் நடமாடும் சேவையில் யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன், உதவி விவசாய பணிப்பாளர் திருமதி. நடனமலர் விஐயன், பாடவிதான உத்தியோகத்தர் திரு. ந.நிரஞ்சன்குமார் மற்றும் தொல்புரம் விவசாய போதனாசிரியர் திரு.க.நிரோஐன் ஆகியோர்

வட மாகாண விவசாய திணைக்களத்தின் நடமாடும் சேவை Read More »

வடக்கில் கோவிட் -19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவுசெய்தோருக்கு வடமாகாண ஆளுநர் பாரட்டு

வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட 50,000 சினோபோம் கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த புதன் கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டமை பாராட்டுதலுக்குரியது என வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு உதவிய வடமாகாண சுகாதார

வடக்கில் கோவிட் -19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவுசெய்தோருக்கு வடமாகாண ஆளுநர் பாரட்டு Read More »

“கோவிட் தடுப்பு மருந்துடன் வலிமையுடன் முன்னோக்கி” என்னும் செயற்றிட்டத்தின் கள விஜயம்

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் “கோவிட் தடுப்பு மருந்துடன் வலிமையுடன் முன்னோக்கி” என்னும் கருப்பொருளுக்கு அமைய கொவிட் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு 30 மே 2021 அன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த கோவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் அரியாலை,கைதடி தெற்கு,கோப்பாய், கரவெட்டி மற்றும் பருத்தித்துறை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மையங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டு நேரடியாக பார்வையிட்டார். குறித்த

“கோவிட் தடுப்பு மருந்துடன் வலிமையுடன் முன்னோக்கி” என்னும் செயற்றிட்டத்தின் கள விஜயம் Read More »

வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்திற்கான கொவிட்-19 தடுப்பூசிகள் வட மாகாண ஆளுநரால் வைபவ ரீதியாக கையளிப்பு

அரசாங்கத்தினால் நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி செயற்திட்டத்திற்கமைய வட மாகாணத்தின் யாழ் மாவட்ட மக்களை கொவிட்-19 பெருந்தொற்றிடரில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் அதிமேதகு ஐனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரால் யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 50,000 தடுப்பூசிகளை வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு, கௌரவ வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் தலைமையில் யாழ் போதனா வைத்தியசாலையில் 30 மே 2021 அன்று காலை 9 மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கௌரவ

வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்திற்கான கொவிட்-19 தடுப்பூசிகள் வட மாகாண ஆளுநரால் வைபவ ரீதியாக கையளிப்பு Read More »

அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் வடமாகாண மக்களுக்கு 50,000 தடுப்பூசிகள் வழங்க தீர்மானம்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்தொற்று நிலமையை கருத்தில் கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் வடமாகாண மக்களுக்கு 50,000 தடுப்பூசிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இத் தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் குறிப்பிடுகையில் , ஆய்வின் அடிப்படையில் அபாய நிலையில் உள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் வடமாகாண மக்களுக்கு 50,000 தடுப்பூசிகள் வழங்க தீர்மானம். Read More »

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல்

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல் 12 மே 2021 அன்று காலை 10 மணியளவில் வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநரின் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் திட்டமிடல், நிதி, நிர்வாகம், ஸ்தாபனம், ஆளணி மற்றும்

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல் Read More »

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுடன் மேற்கொள்ளப்படும் iRoad திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுடன் மேற்கொள்ளப்படும் iRoad திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (11.5.2021) காலை 10 மணியளவில் கௌரவ ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமசெயலாளர் , ஆளுநரின் செயலாளர் , உதவிச்செயலாளர் , இணைப்பு செயலாளர், உள்ளுராட்சி அணையாளர் , மாநகரசபை ஆணையாளர் , வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் , திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். வடமாகாணத்தில் இடம்பெறும் 17 ஒப்பந்த

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுடன் மேற்கொள்ளப்படும் iRoad திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் Read More »