npc2018z

கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு செயற்றிட்டம்

வடமாகாண விவசாயத்;திணைக்கள ஏற்பாட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தியை விவசாயிகளிடையே அதிகரிக்கும் நோக்குடனான விழிப்புணர்வுச் செயற்பாடானது கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் அவர்களின்  தலைமையில் கிளிநொச்சி பொருளாதாரச்சந்தையில் 15.09.2021 அன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது. விவசாய உற்பத்தியில் இரசாயன பாவனை அதிகரிப்பதன் காரணமாக   விவசாய விளைபொருட்கள் நச்சுதன்மையுள்ளதாகவும், தரமற்றதுமாகவும் காணப்படுகின்றது. இதன்காரணமாக மனித உடலில் பல்வேறு வகையான நோய்களும், பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றமை யாவரும் அறிந்த ஓரு விடயமே. எதிர்கால சந்ததிக்கு நஞ்சற்றதும் தரமானதுமான விவசாய […]

கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு செயற்றிட்டம் Read More »

தாளையடி உப தபால் நிலையம், தபால் நிலையமாக தரமுயர்த்தப்பட்டது.

நேற்றைய தினம் (2021.09.09) யாழ் மாவட்டத்துக்கான களவிஜயத்தை மேற்கொண்ட இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் யாழில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நேரடியாக பார்வையிட்டார். இவ் விஜயத்தின் போது, வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸின் முயற்சியினால் தரமுயர்த்தப்பட்ட தாளையடி தபால் நிலையத்திற்கான ஆவணத்தை கௌரவ அமைச்சர் அவர்கள் தபால்மா அதிபர் மதுமதி வசந்தகுமாரிடம் கையளித்தார்.

தாளையடி உப தபால் நிலையம், தபால் நிலையமாக தரமுயர்த்தப்பட்டது. Read More »

2021ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் நடைபெற்றது

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2021ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 05.08.2021 ஆம் திகதி பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் அலுவலகர்கள் கலந்துகொண்டார்கள்.

2021ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் நடைபெற்றது Read More »

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் பதவியேற்றார்

திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்கள் வடக்கு மாகாண சபையின் பிரதம செலாளராக 26 ஜூலை 2021 அன்று கைதடி வடக்கு மாகாணசபை கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர் கொத்தணியின் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் புதிய பிரதம செயலாளர் அவர்களை பாரம்பரிய முறையில் வரவேற்றனர். புதிய பிரதம செயலாளர் அவர்கள் சமய அனுட்டாணங்களை அடியொற்றி

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் பதவியேற்றார் Read More »

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நடைமுறை நிலைமைகளை ஆராயும் கலந்துரையாடல் 27.07.2021 காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில், மூலோபாய நகர திட்டமிடலில் நிறைவடைந்துள்ள திட்டங்கள் தொடர்பான நிலைமை குறித்தும் குறித்த திட்டத்தை முன் கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள்

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

பாற்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா

வவுனியா மாவட்ட மரக்காரம்பளைப் பிரதேசத்தில் மீள ஆரம்பிக்கப்பட்ட பாற் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 15 யூலை 2021 அன்று மாலை 3 மணிக்கு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொழிற்சாலையை திறந்து வைத்த வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுடன் தொழிற்சாலையை மீள ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்ததுடன் இதன் மூலம் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் விவசாயிகளுக்கான சந்தை

பாற்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா Read More »

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட் 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கான களஞ்சிய வசதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட் 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கான களஞ்சிய வசதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு15 யூலை 2021 அன்று மதியம் 12 மணிக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் களஞ்சியசாலைக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்து உரையாற்றிய வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் இத் திட்டமானது கிராமப்புற

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட் 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கான களஞ்சிய வசதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு Read More »

கிளிநொச்சி சித்த ஆதார  வைத்தியசாலையின் பெண்கள் விடுதி திறப்பு விழா வைபவம்

மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட கிளிநொச்சி சித்த ஆதார  வைத்தியசாலையின் பெண்கள் விடுதி இன்று (15.07.2021) காலை 10.30 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த பெண்கள் விடுதி திறப்பு விழா ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் திரைக்கல்லினை திரைநீக்கம் செய்து  கட்டடத்தொகுதியினை திறந்து வைத்ததுடன் குறித்த வைத்திய சாலையின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். குறித்த நிகழ்வில்   வடமாகாண 

கிளிநொச்சி சித்த ஆதார  வைத்தியசாலையின் பெண்கள் விடுதி திறப்பு விழா வைபவம் Read More »

கொடிகாமம் சித்த விசேட சிகிச்சை நிலைய திறப்பு விழா வைபவம்

மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சை மையம்  இன்று காலை 9 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.குறித்த சிகிச்சை நிலைய திறப்பு விழா ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் திரைக்கல்லினை திரைநீக்கம் செய்து  கட்டடத்தைத் திறந்து வைத்ததுடன் அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகளையும் நேரடியாக பார்வையிட்டார். குறித்த நிகழ்வில்  வடமாகாண  சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு

கொடிகாமம் சித்த விசேட சிகிச்சை நிலைய திறப்பு விழா வைபவம் Read More »

உலக வங்கி நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட்- 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு முறையே அச்சுவேலி பிரதேசத்திலும், குப்பிளான் தெற்கு விவசாய சம்மேளன பிரிவிலும் அன்று 14.07.2021 காலை இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் வெங்காய களஞ்சியத்திற்கான அடிக்கல்லினை அச்சுவேலி பிரதேசத்திலும், உருளைக்கிழங்கு

உலக வங்கி நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »