Kathir Sadagopan

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (01 – 15 நவம்பர் 2025)

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் விற்பனைக்காக நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகளின் கிடைப்பனவு விபரம் இவ் வாரம், 01 – 15 நவம்பர் 2025 மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணை – வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – முல்லைத்தீவு

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (01 – 15 நவம்பர் 2025) Read More »

பாத்தீனியம் களை முகாமைக்கு அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமனமும் பயிற்சிவகுப்பும்

1999 ம் ஆண்டின் 35 ம் இலக்க தாவர பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் பாத்தீனியம் களை கட்டுப்பாட்டினை மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்பும் நியமனம் வழங்கும் வைபவமும் வடமாகாண விவசாயத்திணைக்களத்தினால் 2025.11.07 ஆம் திகதி மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் திருநெல்வேலியில் வடமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். மேற்படி பயிற்சி வகுப்பில் மேலதிக மாகாண

பாத்தீனியம் களை முகாமைக்கு அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமனமும் பயிற்சிவகுப்பும் Read More »

அரச துறையில் பொதுமக்கள் சேவையை செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் வினைத்திறனுடன் வழங்குவது தொடர்பான பயிற்சிப் பட்டறை

ஜனாதிபதி செயலகமானது டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து அரச உத்தியோகத்தர்களிடையே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழிநுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் “AI for Transforming Public Service” எனும் தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறைகளை நடாத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வடமாகாணத்திலுள்ள அரச அலுவலகங்களில் பணியாற்றும் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப் பட்டறையானது 27.10.2025 அன்று வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் செயலக மாநாட்டு

அரச துறையில் பொதுமக்கள் சேவையை செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் வினைத்திறனுடன் வழங்குவது தொடர்பான பயிற்சிப் பட்டறை Read More »

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிற்கு வடக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சுக்கள் திணைக்களங்களிற்கு நியமனம் வழங்கப்பட்டது

இலங்கை நிர்வாக சேவைக்கு (திறமை அடிப்படையில்) ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களில் வடக்கு மாகாணசபைக்கு விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களிற்கான நியமன கடிதங்கள் 10.10.2025 அன்று பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. திரு.மா.முரளி, உதவிச் செயலாளர், மகளிர் விவகார அமைச்சு திரு.ஜோ.லோரன்ஸ், உதவிச் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சு திருமதி.கி.சிவரஞ்சினி, உதவிப் பணிப்பாளர், தொழில்துறைத் திணைக்களம் திரு.ச.லோகேஸ்வரன், செயலாளர், நகரசபை, மன்னார்

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிற்கு வடக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சுக்கள் திணைக்களங்களிற்கு நியமனம் வழங்கப்பட்டது Read More »

இறுங்கு செய்கையை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வு– 2025

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள அரிப்பு விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பூநொச்சிக்குளம் கிராமசேவகர் பிரிவில் இறுங்கு செய்கையை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வானது 30.09.2025 ஆம் திகதி செவ்வாயக்கிழமை காலை 10.30 மணியளவில் திரு. M.R.M. இஸ்ஸதீன் அவர்களின் வயலில் மன்னார் மாவட்டத்தின் உதவி விசாயப் பணிப்பாளர் திரு.J.மேர்வின் றொசான் றோச் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், கிராம சேவகர் மற்றும் விவசாயிகள்

இறுங்கு செய்கையை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வு– 2025 Read More »

வடக்கு மாகாண சபை வளாகத்தில் வாணி விழா கொண்டாடப்பட்டது

வடக்கு மாகாண சபை வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சுக்கள், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்கள் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு 02.10.2025 அன்று பேரவைச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கொத்தணி அலுவலகங்கள் இணைந்து நடாத்திய வாணி விழாவின் இறுதி நாள் நிகழ்வில் அமைச்சு செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து

வடக்கு மாகாண சபை வளாகத்தில் வாணி விழா கொண்டாடப்பட்டது Read More »

இயந்திர நெல் நாற்று நடுகை – அறுவடை வயல்விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் வரட்சியான காலநிலைக்கு ஏற்ற நெல் வர்க்கமாக டீப 377(வெள்ளை) நெல் வர்க்கம் இயந்திர நாற்று நடுகை மூலம் பரீட்சார்த்தமாக புளியம்பொக்கனை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறுவடை வயல் விழா நிகழ்வானது 24.09.2025 புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் விவசாய போதனாசிரியர் திரு.யே.சேயோன் தலைமையில் நாகேந்திரபுரம் புளியம்பொக்கனை எனும் இடத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ.விஜயதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இயந்திர நெல் நாற்று நடுகை – அறுவடை வயல்விழா நிகழ்வு Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025

மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு 26.09.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில் மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க.கனகேஸ்வரன், அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ அவர்களும் வடமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025 Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் சிறுதானிய செய்கை ஊக்குவித்தல் வயல்விழா

2025 ஆம் ஆண்டுக்குரிய மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் யாழ்மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தி ஊக்குவித்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தினை செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அறுவடைவிழா நிகழ்வானது திருநெல்வேலி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நந்தாவில் கிராமத்தில் 16.09.2025 அன்று காலை 09.00 மணிக்கு தொழில்நுட்ப உதவியாளர் இ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாண விவசாயப்பணிப்பாளர், வட மாகாணம் திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் கலந்து சிறப்பித்திருந்தார். பிரதி விவசாயப்பணிப்பாளர், பாட விதான உத்தியோகத்தர்கள், கமநல சேவை

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் சிறுதானிய செய்கை ஊக்குவித்தல் வயல்விழா Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் 2025 இன் கீழ் சிறுதானிய செய்கையினை ஊக்குவித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் சிறுதானிய செய்கையினை ஊக்குவித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வானது 17.09.2025 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் விவசாய போதனாசிரியர் திருமதி கி.சுதர்சினி தலைமையில் கோணாவில் பிரதேசத்தில் மயில்வாகணம் விமலரத்தினம் எனும் விவசாயியின் வயல் துண்டத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ.விஜயதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் 2025 இன் கீழ் சிறுதானிய செய்கையினை ஊக்குவித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வு Read More »