October 26, 2026

கடல்சார் சுற்றுலா முயற்சிகள் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறைக்குப் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் – ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் கடல்சார் வளங்களைச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் புதிய முயற்சிகள், சர்வதேச அளவில் வடக்கு மாகாணத்தை நோக்கிச் சுற்றுலாவிகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘எல்லாளன் டூரிஸம்’ (Ellalan Jaffna Tourism & Adventure) நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைவாக, யாழ்ப்பாணக் குடாக்கடலின் இயற்கை அழகை ரசிப்பதற்கும் பல்வேறு கடல்சார் விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குமான விசேட படகுச் சுற்றுலா நிகழ்வு இன்று (25.10.2026) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. […]

கடல்சார் சுற்றுலா முயற்சிகள் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறைக்குப் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் – ஆளுநர் Read More »

முல்லை மண்ணின் பாரம்பரியக் கலைகளையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்த இவ்வாறான நிகழ்வுகள் துணைநிற்கும் – ஆளுநர்.

முல்லை மண் வீரம் செறிந்த மண். தனது மண்ணுக்கே உரித்தான தனித்துவமான கலைகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றது. அவற்றைத் தொடர்ந்து பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் பெரிதும் துணைநிற்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ஆகியன இணைந்து நடத்தும் ‘பாரம்பரியக் கலைகளின் சங்கமம் – முல்லைமோடி 2026’ மற்றும் ‘பாரம்பரிய

முல்லை மண்ணின் பாரம்பரியக் கலைகளையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்த இவ்வாறான நிகழ்வுகள் துணைநிற்கும் – ஆளுநர். Read More »

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை – ஆளுநர்.

யாழ்ப்பாணம் நகர நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் தற்போதைய நிலைமைகளை நேரில் ஆராய்ந்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அதன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடலை விரைவில் நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார். ஆளுநர் அவர்களும் யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகளும் இணைந்து இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை நவீன சந்தைக் கட்டடத் தொகுதியைப் பார்வையிட்டனர். யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகள் கடந்த 20ஆம் திகதி

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை – ஆளுநர். Read More »

மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு.

குளத்தின் வான் மேவுவதால் ஆண்டுதோறும் டிசெம்பர், ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் போக்குவரத்துத் துண்டிக்கப்படும் அம்பலப்பெருமாள் குளப் பகுதியில், ரூ.200 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பெட்டிவடிகால் மற்றும் அணுகுவீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 17.12.2025 அன்று அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய பகுதிகளுக்கு அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களப் பணிப்பாளர்களுடன் களப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், அம்பலப்பெருமாள் குளப் பகுதியில் மேம்பாலம் அமைத்துத் தருமாறு

மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு. Read More »

யாழ்ப்பாணம் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதி ஆளுநரைச் சந்தித்தார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தின் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் வீரக்கோன் அவர்களுக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. ஆளுநர் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில், மேஜர் ஜெனரல் வீரக்கோன் அங்கு பணியாற்றியிருந்தார். அக்காலப்பகுதியில் இருவரும் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை இச்சந்திப்பின்போது நினைவுகூர்ந்தனர்.

யாழ்ப்பாணம் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதி ஆளுநரைச் சந்தித்தார். Read More »

யானை அச்சுறுத்தலிலிருந்து மக்களைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துணுக்காய் மக்கள் ஆளுநரிடம் கோரிக்கை.

யானைகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரச் செயற்பாடுகளும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த துணுக்காய் பிரதேச மக்கள், தமது பகுதிகளில் யானை வேலிகளை விரைவாக அமைத்துத் தருமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை விடுத்தனர். ஆளுநர் மற்றும் வன்னி மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனும் இணைந்து, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான்குளம், ஐயங்கன்குளம், தேறாங்கண்டல், பாரதிநகர், புகழேந்திநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று (22.10.2026) வியாழக்கிழமை களப்பயணம் மேற்கொண்டு, மக்களின்

யானை அச்சுறுத்தலிலிருந்து மக்களைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துணுக்காய் மக்கள் ஆளுநரிடம் கோரிக்கை. Read More »

துணுக்காய் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை – ஆளுநர் உறுதி.

முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேசத்தில் விவசாயிகள் முன்வைத்த குளப் புனரமைப்பு, அணைக்கட்டு உயர்த்துதல் மற்றும் வாய்க்காலுக்குப் பாலம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளைச் சாதகமாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஆளுநர் தலைமையில், வன்னி மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று (22.10.2026) துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள

துணுக்காய் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை – ஆளுநர் உறுதி. Read More »

ரூ.62 மில்லியன் நிதியில் இரு கிராமப்புறப் பாடசாலைகளுக்குப் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் – ஆளுநர் கையளிப்பு.

வடக்கு மாகாண சபையின் மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ், 62 மில்லியன் ரூபா செலவில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட உயிலங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் தென்னியன்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (22.10.2026) வியாழக்கிழமை மாணவர்களிடம் கையளித்தார். உயிலங்குளம் பாடசாலையில் 28 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் கையளிக்கப்பட்டது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல்

ரூ.62 மில்லியன் நிதியில் இரு கிராமப்புறப் பாடசாலைகளுக்குப் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் – ஆளுநர் கையளிப்பு. Read More »

தலைமைத்துவம் பதவியில் அல்ல; பொறுப்பான நடத்தையில் தொடங்குகிறது – ஆளுநர்.

நாட்டை மாற்ற வேண்டும் என நினைத்தால், முதலில் நமது நடத்தையை மாற்றுவோம். நாளைய தலைவர்களாகக் காத்திருக்காமல், இன்றைய மாற்றத்துக்கான முன்னுதாரணங்களாக இளைஞர்கள் திகழ வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ‘தூய இலங்கை’ (Clean Sri Lanka) செயற்றிட்டத்தின் கீழ், தீவக வலயக் கல்வி அலுவலகத்தின் பங்களிப்புடன் நடைபெற்ற ‘அடுத்த தலைமுறைத் தலைவர்கள்’ (Next Gen Leaders) தலைமைத்துவப் பயிற்சிச் செயலமர்வு இன்று (21.10.2026) புதன்கிழமை புங்குடுதீவு மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில்

தலைமைத்துவம் பதவியில் அல்ல; பொறுப்பான நடத்தையில் தொடங்குகிறது – ஆளுநர். Read More »