குப்பை கொட்டுவோரைக் கண்டறிய கண்காணிப்புக் கமராக்கள் – நடவடிக்கையை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் முன்னெடுக்க வேண்டும் – ஆளுநர்.
பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்காணிப்புக் கமராக்கள் மூலம் கண்டறிந்து தண்டம் அறவிடும் நடவடிக்கையை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் முன்னெடுக்க வேண்டும் எனவும், இதன் மூலம் பொது இடங்களில் குப்பை கொட்டப்படுவதைத் தடுக்கவும் சுத்தமான சூழலை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி […]
