வடக்கு மாகாண சபை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் 74 சாரதிகள் ஆட்சேர்ப்புக்கு அனுமதி
வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் சாரதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மக்களுக்கான அத்தியாவசிய உள்ளூராட்சி சேவைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் 74 சாரதி பதவிகளை ஆட்சேர்ப்பு மூலம் நிரப்புவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு மாகாண சபையின் வரலாற்றில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒரே கட்டமாக இவ்வளவு பெருந்தொகையான சாரதிகளை ஆட்சேர்ப்பு மூலம் உள்ளீர்ப்பதற்கான அனுமதி கிடைத்திருப்பது முதன்முறையாகும் என வடக்கு மாகாண கௌரவ […]
