கள் ஏற்றுமதியில் உள்ள இடையூறுகளை அகற்றி வெளிப்படையான நிரந்தரப் பொறிமுறையை உருவாக்கத் தீர்மானம்
கள் ஏற்றுமதியில் தற்போது நிலவும் இடையூறுகளை அகற்றி, எதிர்காலத்தில் வெளிப்படையானதும் நிரந்தரமானதுமான பொறிமுறையொன்றை உருவாக்குவதுடன், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவை கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று (10.09.2026) வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. குறிப்பாக, காரைநகர் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் […]
